நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஓஷன் இன்ஃபினிட்டி நிறுவனம் எம்.எச்.370 தேடுதல் நடவடிக்கையை நிறுத்தியது

கோலாலம்பூர்: 

மலேசியன் ஏர்லைன்ஸ் எம்.எச்.370 விமானம் தொடர்பாக எந்த புதிய தடயமும் கண்டுபிடிக்கப்படவில்லையாதலால் ஆழ்கடல் ஆய்வு நிறுவனமான ஓஷன் இன்ஃபினிட்டி இந்தியப் பெருங்கடலில் தேடுதல் நடவடிக்கையை நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. 

2018 ஆம் ஆண்டு முதல் தொடங்கிய தேடுதல் முயற்சியில் நிறுவனம் மொத்தம் 151 நாட்கள் கடலில் பணியாற்றி, சுமார் 140,000 சதுர கிலோமீட்டர் கடலடித் தளத்தை வரைபடமாக பதிவு செய்துள்ளதாக நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஒலிவர் ப்ளன்கெட் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

“எங்களிடம் உள்ள அனைத்து தகவல்களையும் தரவுகளையும் பயன்படுத்தி மீண்டும் தேடுதல் நடத்துவது எங்களுக்கு முக்கியமானதாக இருந்தது. இருப்பினும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், விமானத்தை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை,” என்று அவர் கூறினார்.

இந்த நடவடிக்கையின் புவியியல் பரப்பளவும் தொழில்நுட்ப சவால்களும் மிகவும் பெரியதாக இருப்பதால் கடினமாக உள்ளது என்று ப்ளன்கெட் விளக்கினார்.

மேலும், இந்தத் தேடுதல் நடவடிக்கையில் நிறுவனத்தின் நிபுணத்துவத்துடன் சேர்த்து இதுவரை பயன்படுத்தப்பட்ட மிக முன்னேற்றமான தொழில்நுட்பங்களும் பயன்படுத்தப்பட்டதாக அவர் கூறினார். இதில் அறிவியல் துல்லியம், தானியங்கி தொழில்நுட்ப முறைகள், ரோபோட்டிக் சாதனங்கள் ஆகியவை இணைந்து பயன்படுத்தப்பட்டன.

 அமைப்பின் அனுபவமும் புதிய தொழில்நுட்ப முன்னேற்றங்களும் தேடுதலை 2018ஆம் ஆண்டு நடந்த முதல் முயற்சியுடன் ஒப்பிடும்போது அதிக துல்லியத்துடனும் வேகத்துடனும் மேற்கொள்ள உதவியதாக அவர் தெரிவித்தார்.

“எதிர்பார்த்த முடிவு கிடைக்காத போதிலும், பலர் தங்கள் சிறந்த முயற்சியை இந்தப் பணிக்காக வழங்கியுள்ளனர்,” என்றார் அவர்.

மேலும், இந்தத் தேடுதல் முயற்சிக்கு ஆதரவு வழங்கிய பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கும், மலேசிய அரசுக்கும், ஆஸ்திரேலிய அரசுக்கும், பல நிறுவனங்களுக்கும், தனிநபர்களுக்கும் அவர் நன்றியைத் தெரிவித்தார்.

இந்தத் தேடுதல் நடவடிக்கை முடிவடைந்தாலும், எம்.எச்.370 விமானத்தைக் கண்டுபிடிக்க உதவும் நிறுவனத்தின் உறுதி தொடரும் என்றார் அவர்.

“நிலையமைப்பு அனுமதிக்கும் போது மீண்டும் தேடுதல் நடவடிக்கையை தொடங்குவதற்காக மலேசிய அரசுடன் தொடர்ந்து இணைந்து செயல்படுவோம்,” என்று அவர் தெரிவித்தார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset