செய்திகள் மலேசியா
மாடானி அரசு மக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்புகளை விரைவில் தெரிவிக்கும்
கோலாலம்பூர்:
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹீம் வரும் அய்டில்ஃபித்ரி - நோன்புப் பெருநாளை முன்னிட்டு மக்களுக்கு விரைவில் பல நல்ல செய்திகளை அறிவிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இதை பிரதமரின் மூத்த பத்திரிகை செயலாளர் துங்கு நஷ்ருல் அபைதா, பிரதமர் அலுவலக (PMO) முகநூலில் இன்று நேரடியாக ஒளிபரப்பிய ஒரு செய்திக் குறிப்பின் மூலம் அறிவித்தார்.
“மாடானி அரசு மக்களின் நலன்கள் எப்போதும் முன்னிலையில் இருக்குமாறு தொடர்ந்து முயற்சி செய்யும், மேலும் நியாயமான, அமைதியான, மனிதநேயம் மிக்க நாட்டை கட்டியெழுப்பும் உறுதியுடன் உள்ளது என்று அவர் கூறினார்.
பிரதமர் இன்று அறிவித்த மடானி அரசாங்கத்தின் ஏழு உடனடி தலையீட்டு நடவடிக்கைகளைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு அறிவிக்கப்பட்டது என்று துங்கு நஷ்ருல் தெரிவித்தார்.
இதன் மூலம், மக்கள் அய்டில்ஃபித்ரி கொண்டாட்டத்திற்கு தயாராக முடியும்.
“குறிப்பாக, பிரதமர் இன்று காலை அறிவித்த முக்கிய அறிவிப்புகளில், Sumbangan Tunai Rahmah (STR) கட்டணம் முன்னதாக ஏற்றப்பட்டது, 2026 நிதி உதவி பொதுநிர்வாகிகள், ஓய்வுபெற்றோர், முன்னாள் வீரர்கள், இமாம், பிலால், KAFA ஆசிரியர்கள் போன்றோருக்கு வழங்கப்படும் ஆகியவை அடங்கும்.
“காலை செய்தியில், மாடானி அரசு நாட்டின் அனைத்து பகுதிகளிலும் Rahmah விற்பனை திட்டத்தை விரிவுபடுத்துவது, FlySiswa விமான டிக்கெட் மானிய முயற்சியுடன் விரிவுபடுத்தப்படுவதாக கூறப்பட்டது.
“இவை பிரதமர் இன்று காலை அறிவித்த ஏழு முக்கிய அறிவிப்புகளில் சில,” என்றும் அவர் மேலும் அவர் கூறினார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 9, 2026, 6:19 pm
சபாவில் நாளை முதல் தொடர்ச்சியான மழை பெய்யும்
March 9, 2026, 6:18 pm
மத்திய கிழக்கில் மலேசியர்களை வெளியேற்றும் செயல் இறுதி நிலையில் உள்ளது: MKN
March 9, 2026, 5:30 pm
மெக்காலம் பகுதியில் வெளிநாட்டவர் உயிரிழந்த நிலையில் கண்டெடுப்பு: போலிஸ் விசாரணை தீவிரம்
March 9, 2026, 5:27 pm
கிள்ளானில் மூன்று தொழிற்சாலைகள் தீயில் அழிந்து சேதம்
March 9, 2026, 5:26 pm
லாரியில் கடத்திய 124 கிலோ கஞ்சா பூக்கள் பறிமுதல்: மூவர் கைது
March 9, 2026, 5:24 pm
