நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மத்திய கிழக்கில் மலேசியர்களை வெளியேற்றும் செயல் இறுதி நிலையில் உள்ளது:  MKN 

கோலாலம்பூர்: 

மேற்கு ஆசிய பகுதியில் ஏற்பட்ட அரசியல் மோதலினால் பாதிக்கப்பட்ட சில நாடுகளில் உள்ள மலேசிய குடிமக்களை வெளியேற்றும் செயல்முறை தற்போது இறுதி நிலைக்கு வந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவின்படி பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மலேசிய குடிமக்களின் பாதுகாப்பும் நலனும் முழுமையாக பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய அனைத்து தேவையான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படுவதாக தேசிய பாதுகாப்பு கவுன்சில் (MKN) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“தேசிய பாதுகாப்பு கவுன்சில் (MKN) இந்த நடவடிக்கையை சம்பந்தப்பட்ட நாடுகளில் உள்ள மலேசிய பிரதிநிதித்துவ அலுவலகங்களுடன் இணைந்து வெளிநாட்டு அமைச்சகம் (KLN) உடன் நெருங்கிய ஒத்துழைப்பில் ஒருங்கிணைக்கும்,” என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மலேசியர்களை மீண்டும் அழைத்து வருவதற்கான முழு செயல்முறையும் முடியும் வரை, இந்த நடவடிக்கையின் முன்னேற்றத்தை KLN உடன் இணைந்து MKN தொடர்ந்து அனைத்து தரப்பினருக்கும் தெரிவிக்கும்.

“பாதிக்கப்பட்ட மலேசிய குடிமக்கள் அனைவரும் பாதுகாப்பாக தாய்நாட்டிற்கு திரும்ப மலேசிய அரசு அனைத்து தேவையான முயற்சிகளையும் செய்யும்,” என்றும் அறிக்கை குறிப்பிடுகிறது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset