நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சுபாங் ஜெயா தொழிற்சாலை வளாகத்தில் சட்டவிரோத போதைப்பொருள் தயாரிப்பை போலிஸ் முறியடித்தது: டத்தோ ஹுசைன் உமர் கான்

கோலாலம்பூர்: 

சுபாங் ஜெயா, சுபாங் தொழிற்சாலை வளாகத்தில் உள்ள சட்டவிரோத போதைப்பொருள் தயாரிப்பை போலிசார் மார்ச் 2 அன்று முறியடித்தனர்.

அந்த தொழிற்சாலையில் சட்டவிரோதமாக போதைப்பொருள் தயாரிக்கும் ஆய்வு அறை செயல்பட்டு வந்தது அம்பலமாகியது.

புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றவியல் புலனாய்வுத் துறை இயக்குநர், டத்தோ ஹுசைன் உமர் கான் தெரிவித்ததாவது, இந்த நடவடிக்கை ரகசிய தகவல்களின் அடிப்படையிலும், பொதுமக்களின் புகார்களினாலும் நடைமுறைப்படுத்தப்பட்டது.

சோதனையில் பல்வேறு ரசாயனங்கள், போதைப்பொருள் தயாரிக்க பயன்படும் கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதில் 214 டன்னில் சந்தேகத்துக்கிடையான திரவங்கள், 3 டன்னில் பொடி ரசாயனங்கள், 5 பாட்டில்கள், 0.94 கிலோ பொடி, 5 இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஆரம்பகட்ட விசாரணையில், இந்த போதைப்பொருள் குழு 2024 அக்டோபர் முதல் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்ததாக தெரியவந்தது. அவர்கள் தொழிற்சாலை வளாகத்தை ஆய்வு அறையாக பயன்படுத்தி தயாரித்த போதைப்பொருளை கிள்ளான் பள்ளத்தாக்கு சந்தையில் விநியோகிக்க திட்டமிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு 1952 ஆம் ஆண்டு கடுமையான போதைப்பொருள் சட்டத்தின் பிரிவு 39B கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset