நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

லாரியில் கடத்திய 124 கிலோ கஞ்சா பூக்கள் பறிமுதல்: மூவர் கைது

கோலாலம்பூர்: 

தீபகற்பத்தின் வடப்பகுதியில் இருந்து தெற்கு பகுதிகளுக்கு லாரி மூலம் கஞ்சா பூக்களைக் கடத்தி வந்த போதைப்பொருள் கும்பலின் செயல்பாடு காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டது.

கடந்த மார்ச் 5-ஆம் தேதி தாமான் ஸ்ரீ ராம்பாய் பகுதியில் நடத்திய சோதனையில் 27 முதல் 38 வயதுக்கிடையிலான மூன்று ஆண்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடமிருந்து சுமார் 10.2 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 124.7 கிலோ எடையுடைய கஞ்சா பூக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

ஒரு வீட்டு முன் நிறுத்தப்பட்டிருந்த லாரியை சோதனை செய்தபோது 10 பெட்டிகளில் இந்த போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

முதல் சந்தேகநபர் கும்பலின் ஒருங்கிணைப்பாளராகவும், மற்ற இருவர் போதைப்பொருள் விநியோகத்தை மேற்கொள்ளும் ஓட்டுநர்களாகவும் செயல்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த கும்பல் கடந்த ஆண்டு அக்டோபர் முதல் செயல்பட்டு வந்ததாகவும், போக்குவரத்திற்காக லாரியை பயன்படுத்தியதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் சுமார் 85,000 ரிங்கிட் மதிப்புள்ள நான்கு சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த போதைப்பொருள் கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் விநியோகிக்க திட்டமிடப்பட்டதாகவும், அது சுமார் 2,49,000 போதைப்பொருள் பயனாளர்களுக்கு பயன்படுத்தப்படக்கூடிய அளவு எனவும் கூறப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்களின் சிறுநீர் பரிசோதனையில்

போதைப்பொருள் பயன்பாடு இல்லை என உறுதி செய்யப்பட்டது. இருப்பினும் இரண்டாவது சந்தேகநபருக்கு போதைப்பொருள் தொடர்பான ஒரு பழைய வழக்கும், மூன்றாவது நபருக்கு மூன்று குற்றப் பதிவுகளும் உள்ளதாக தெரியவந்துள்ளது.

மூவரும் மார்ச் 5 முதல் 11 வரை ஏழு நாட்கள் காவல் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset