நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குழந்தை பராமரிப்பு மையத்தில் 4 மாதக் குழந்தை மரணம்: போலிஸ் விசாரணையைத் தீவிரப்படுத்தியது

செபராங் ஜெயா: 

மருத்துவமனை வளாகத்தில் செயல்படும் குழந்தை பராமரிப்பு மையத்தில் வைக்கப்பட்டிருந்த நான்கு மாத ஆண் குழந்தை இன்று உயிரிழந்தது. இந்த சம்பவத்தில் குழந்தை துன்புறுத்தல் நடந்திருக்கலாம் என சந்தேகித்து குடும்பத்தினர் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

ஹெயில் ஹாரித் முஹம்மத் சயாஃபீஸ் என்ற அந்தக் குழந்தை நேற்று இரவு மையத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில், இன்று அதிகாலை 4 மணியளவில் மயக்க நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது அவரது தாய் உம்மு ஹபிபா வஹாப், (30), செவிலியராக இரவு பணியில் இருந்தார்.
மருத்துவர்கள் சுமார் ஒரு மணி நேரம் இருதய-மூச்சுக் காப்பு சிகிச்சை வழங்கினாலும் குழந்தையை காப்பாற்ற முடியவில்லை.

குழந்தையின் மாமா அஹமத் லுத்ஃபிஹாதி வஹாப் கூறுகையில், குழந்தையின் முகம் நீல நிறமாக மாறியதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து அவர்கள் உடனே மருத்துவமனைக்கு சென்றதாக தெரிவித்தார்.

பின்னர் குழந்தை பராமரிப்பு மையத்தின் கண்காணிப்பு காட்சி பதிவுகளை பார்த்தபோது துன்புறுத்தல், அச்சுறுத்தல் நடந்திருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டதால் காவல்துறையில் புகார் அளித்ததாகவும் கூறினார்.

இம் மையம் 24 மணி நேரமும் கண்காணிப்புடன் செயல்பட்டாலும், குழந்தை மயக்க நிலையில் அவசர பிரிவிற்கு கொண்டு செல்லப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதுடன், இரண்டு பெண்கள் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset