நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கிள்ளானில் மூன்று தொழிற்சாலைகள் தீயில் அழிந்து சேதம்

ஷா ஆலம்: 

கிள்ளான் நகரில், ஜாலான் காபார், பத்து 9 ½, கம்போங் பெராபட் பகுதியில் மூன்று தொழிற்சாலைகள் இன்று தீப்பிடித்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.

சிலாங்கூர் தீயணைப்பு, மீட்புப் துறையின் உதவி இயக்குநர் அஹமத் முக்லிஸ் முக்தார் கூறுகையில், மாலை 1.44 மணியளவில் பொதுமக்களிடமிருந்து அழைப்பு வந்தது. அதன்பின் காபார், கிள்ளான் வடக்கு, கிள்ளான் தெற்கு, தீயணைப்பு நிலையங்களிலிருந்து 31 தீயணைப்பு வீரர்களும், வாகனங்களும் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன.

அப்போது தீ தொழிற்சாலை கட்டடங்களை பாதித்ததாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவத்தினால் யாரும் காயமடையவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset