செய்திகள் மலேசியா
“நாட்டில் குழந்தை திருமணங்கள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது”: தெரசா கோக்
கோலாலம்பூர்:
குழந்தை திருமணங்கள் அதிகரித்து வருவதாக் குறித்து செப்புதே நாடாளுமன்ற உறுப்பினர் தெரசா கோக் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
மலேசிய புள்ளிவிவரத் துறையின் தகவலின்படி, 2023-ஆம் ஆண்டு 923 குழந்தை திருமணங்கள் பதிவாகிய நிலையில், 2024-ஆம் ஆண்டு அது 1,261 ஆக அதிகரித்துள்ளது. 2025-ஆம் ஆண்டுக்கான அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
சமூக வலைதளத்தில் குழந்தை திருமணங்கள் தொடர்பான தனது பதிவில் ஒருவர், 13 வயது அல்லது அதற்கும் குறைவான வயதில் திருமணம் செய்வது அவர்களின் கலாச்சாரத்தின் ஒரு பகுதி என கருத்து தெரிவித்ததை அவர் மேற்கோள் காட்டினார். இது அந்த பிரச்சினை இன்னும் கவலைக்கிடமானதாக இருப்பதை காட்டுகிறது எனவும் அவர் கூறினார்.
சட்டத்தை மாற்றுவது எளிதானது அல்ல; ஏனெனில் அது மாநில அரசுகளின் அதிகாரத்துடனும், சமூக மனப்போக்கை மாற்றுவதுடனும் தொடர்புடையது என்றும் அவர் விளக்கினார்.
மேலும் திருமண சட்டங்கள் சிவில், ஷரியா நீதித்துறை அதிகாரங்களின் கீழ் மாநிலங்களின் கட்டுப்பாட்டில் இருப்பதால் சட்ட, நிர்வாக சவால்கள் சீர்திருத்த முயற்சிகளை மந்தமாக்குகின்றன என்றும் தெரிவித்தார்.
குடும்ப வன்முறைக்கு எதிரான சட்டத்தை வலுப்படுத்துவதற்கே நாடாளுமன்றத்தில் பல ஆண்டுகள் எடுத்ததாகவும் அவர் நினைவூட்டினார்.
பெண்கள் பாதுகாப்பு அமைப்பு ஏற்பாடு செய்த 2026 புள்ளிவிவர அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில் அவர் இதை கூறினார். இதில் பெண்கள் பாதுகாப்பு, குடும்ப வன்முறை மற்றும் குழந்தை திருமணங்கள் தொடர்பான தரவுகள் வெளியிடப்பட்டன.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 9, 2026, 6:21 pm
மாடானி அரசு மக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்புகளை விரைவில் தெரிவிக்கும்
March 9, 2026, 6:19 pm
சபாவில் நாளை முதல் தொடர்ச்சியான மழை பெய்யும்
March 9, 2026, 6:18 pm
மத்திய கிழக்கில் மலேசியர்களை வெளியேற்றும் செயல் இறுதி நிலையில் உள்ளது: MKN
March 9, 2026, 5:30 pm
மெக்காலம் பகுதியில் வெளிநாட்டவர் உயிரிழந்த நிலையில் கண்டெடுப்பு: போலிஸ் விசாரணை தீவிரம்
March 9, 2026, 5:27 pm
கிள்ளானில் மூன்று தொழிற்சாலைகள் தீயில் அழிந்து சேதம்
March 9, 2026, 5:26 pm
லாரியில் கடத்திய 124 கிலோ கஞ்சா பூக்கள் பறிமுதல்: மூவர் கைது
March 9, 2026, 5:24 pm
