செய்திகள் மலேசியா
சையத் முஹம்மத் நக்கீப்பை நினைவுகூரும் வகையில் ISTAC-ல் சிறப்பு நூலகத்தை அமைக்க அரசு முன்மொழிகிறது: பிரதமர்
கோலாலம்பூர்:
தான் ஸ்ரீ பேராசிரியர் டாக்டர் சையத் முஹம்மத் நக்கீப் அல்-அட்டாஸின் சேவைகளையும் பங்களிப்புகளையும் நினைவுகூரும் வகையில் சர்வதேச இஸ்லாமிய சிந்தனை, நாகரிக நிறுவனத்தில் (ISTAC) சிறப்பு நூலகத்தை நிறுவுவது குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருகிறது.
“அந்த நூலகத்தை ISTAC-இல் சிறப்பு மண்டபமாக மாற்றி இந்தப் புகழ்பெற்ற அறிவாளியின் சேவைகளை நினைவுகூர அரசு பரிசீலனை செய்து வருகிறது. இந்த விஷயம் அவர் குடும்பத்தினருடன் ஆலோசிக்கப்படுகிறது,” என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
“அவரின் மறைவு நாட்டுக்கு மட்டுமல்ல உலக உளவியல், இஸ்லாமிய அறிவியல் உலகுக்கும் ஒரு பெரிய இழப்பாகும். அவரது சிந்தனைகளும் அறிவியல் பங்களிப்புகளும் இஸ்லாமிய தத்துவ வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பாக இருந்தது,” என்று பிரதமர் கூறினார்.
“மலேசிய இஸ்லாமிய இளம் முன்னோடிகள் சங்கம் (ABIM) உடன் இணைந்து இஸ்லாம், மலேசிய கலாச்சார வரலாறு என்ற நூலை வெளியிட்டோம். இது ஒரு முக்கியமான, நிலையான வரலாற்று நூலாகும்,” எனவும் அவர் தெரிவித்தார்.
பேராசிரியர் அவர்களின் உடல் புகழ்பெற்ற புக்கிட் கியாரா இஸ்லாமிய கல்லறையில் புதைக்கப்படும்.
பேராசிரியர் நேற்று மாலை 6.47 மணிக்கு காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 9, 2026, 6:18 pm
மத்திய கிழக்கில் மலேசியர்களை வெளியேற்றும் செயல் இறுதி நிலையில் உள்ளது: MKN
March 9, 2026, 5:30 pm
மெக்காலம் பகுதியில் வெளிநாட்டவர் உயிரிழந்த நிலையில் கண்டெடுப்பு: போலிஸ் விசாரணை தீவிரம்
March 9, 2026, 5:27 pm
கிள்ளானில் மூன்று தொழிற்சாலைகள் தீயில் அழிந்து சேதம்
March 9, 2026, 5:26 pm
லாரியில் கடத்திய 124 கிலோ கஞ்சா பூக்கள் பறிமுதல்: மூவர் கைது
March 9, 2026, 5:24 pm
குழந்தை பராமரிப்பு மையத்தில் 4 மாதக் குழந்தை மரணம்: போலிஸ் விசாரணையைத் தீவிரப்படுத்தியது
March 9, 2026, 5:01 pm
1.7 பில்லியன் ரிங்கிட் ஓய்வூதிய சரிசெய்தல் வழக்கில் அரசு வெற்றி
March 9, 2026, 5:00 pm
ஓஷன் இன்ஃபினிட்டி நிறுவனம் எம்.எச்.370 தேடுதல் நடவடிக்கையை நிறுத்தியது
March 9, 2026, 3:50 pm
