செய்திகள் மலேசியா
புதர்களில் தோன்றிய புலி: சமூக வலைதளத்தில் வைரலான காணொலியினால் மக்கள் பீதி
குளுவாங்:
ஸ்ரீ லாலாங் அருகிலுள்ள கம்போங் ரஹ்மத் பகுதியில் புதர்களில் தோன்றிய புலி தொடர்பான காணொலி சமூக வலைதளங்களில் பரவி, அப் பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு நிமிடம் 36 விநாடிகள் கொண்ட அந்தக் காணொலியில், புலி மெதுவாக புதர்களுக்குள் நகரும் காட்சி பதிவாகியுள்ளது.
மாநில சுகாதார, சுற்றுச்சூழல் நிர்வாகக் குழு உறுப்பினர் லிங் தியான் சூன் கூறுகையில், இந்த சம்பவம் குறித்து வனவிலங்கு பாதுகாப்பு, தேசிய பூங்கா துறை தகவல் பெற்றுள்ளது.
அதனைத் தொடர்ந்து அதிகாரிகளும் பணியாளர்களும் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வனவிலங்குகளை காணும் பொதுமக்கள் அவற்றை அணுகவோ அல்லது தொந்தரவு செய்யவோ கூடாது; அது ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். சம்பந்தப்பட்ட இடத்திலிருந்து விலகி இருந்து உடனடியாக காவல்துறை அல்லது வனவிலங்கு பாதுகாப்புத் துறைக்கு தகவல் அளிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த காணொளி சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து பலரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் தெரிவித்துள்ளனர்.
மேலும் அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அந்த வழியாகச் செல்லும் மக்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் பலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 9, 2026, 6:18 pm
மத்திய கிழக்கில் மலேசியர்களை வெளியேற்றும் செயல் இறுதி நிலையில் உள்ளது: MKN
March 9, 2026, 5:30 pm
மெக்காலம் பகுதியில் வெளிநாட்டவர் உயிரிழந்த நிலையில் கண்டெடுப்பு: போலிஸ் விசாரணை தீவிரம்
March 9, 2026, 5:27 pm
கிள்ளானில் மூன்று தொழிற்சாலைகள் தீயில் அழிந்து சேதம்
March 9, 2026, 5:26 pm
லாரியில் கடத்திய 124 கிலோ கஞ்சா பூக்கள் பறிமுதல்: மூவர் கைது
March 9, 2026, 5:24 pm
குழந்தை பராமரிப்பு மையத்தில் 4 மாதக் குழந்தை மரணம்: போலிஸ் விசாரணையைத் தீவிரப்படுத்தியது
March 9, 2026, 5:01 pm
1.7 பில்லியன் ரிங்கிட் ஓய்வூதிய சரிசெய்தல் வழக்கில் அரசு வெற்றி
March 9, 2026, 5:00 pm
ஓஷன் இன்ஃபினிட்டி நிறுவனம் எம்.எச்.370 தேடுதல் நடவடிக்கையை நிறுத்தியது
March 9, 2026, 3:50 pm
