நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சட்டவிரோத சூதாட்ட நடவடிக்கை: கடை உரிமையாளர் கைது

சரடொக்: 

ஒரு தனியார் கடைக்காரர், தன் கடையை சட்டவிரோத லாட்டரி விற்பனை நிலையமாக பயன்படுத்தியதற்காக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் சரடொக் சந்தைப் பகுதியில் நேற்று நடந்த சிறப்பு செயல்பாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது.

33 வயதான அந்தக் குடியிருப்பாளர், சரடொக் குற்றப் புலனாய்வுப் பிரிவு D7 (BSJD), சரடோக் மாவட்ட காவல் தலைமையகம் (IPD), இன்ஸ்பெக்டர் ஹென்றி முஜி தலைமையில் வழிநடத்திய போலிஸ் அணியால் கைது செய்யப்பட்டார்.

“பிடிபட்டவற்றில் ஒருவரிடம், ஒரு ரெட்மி 13C கைத்தொலைப்பேசி, சட்டவிரோத பொது லாட்டரி எண்கள் அடங்கிய ஒரு காகிதம், ரொக்கப் பணம் ஆகியவை இருந்தன" என்று இன்ஸ்பெக்டர் ஹென்றி தெரிவித்தார்.

இந்த வழக்கு 1953 ஆம் ஆண்டு திறந்த சூதாட்ட சட்டத்தின் பிரிவு 4A(a) இன் கீழ் விசாரிக்கப்படுகிறது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset