நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் குளியலறைகளில் தஞ்சம் புகுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன:  ஹன்னா இயோ

கோலாலம்பூர்:

தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் குளியலறைகளில் தஞ்சம் புகுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

பிரதமர் துறை கூட்டரசுப் பிரதேச அமைச்சர் ஹன்னா இயோ இதனை தெரிவித்தார்.

கோலாலம்பூரில் உள்ள மலேசிய தீயணைப்பு, மீட்புத் துறையின் தரவுகளின்படி, தலைநகரைச் சுற்றியுள்ள பிபிஆர் உள்ளிட்ட அடுக்கு மேம்பாட்டு குடியிருப்புப் பகுதிகளை உள்ளடக்கிய குளியலறைகளில் தஞ்சம் புகுந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு விகிதம் 2024 இல் மூன்று இறப்புகளுடன் ஒப்பிடும்போது கடந்த ஆண்டு ஐந்து இறப்புகளாக அதிகரித்துள்ளது.

தீ விபத்துகளின் போது குளியலறைகள் மற்றும் கழிப்பறைகள் பாதுகாப்பான இடங்கள் என்று பலர் இன்னும் நம்புகின்றனர்.

இது விழிப்புணர்வு அதிகரிப்பது முக்கியம் என்பதற்கான சமிக்ஞையாகும்.

மேலும் இந்த கருத்து தவறானது. ஏனெனில் இதுபோன்ற நெருக்கடியான சூழ்நிலைகளில், குளியலறைகள்,  கழிப்பறைகள் வீடுகளில் மிகவும் ஆபத்தான இடங்களாக மாறும்.

தீ விபத்துகளின் போது குளியலறைகள் மற்றும் கழிப்பறைகள் பாதுகாப்பான இடங்கள் அல்ல என்பதை பொதுமக்களுக்கு நினைவூட்ட விரும்புகிறோம்.

ஏனென்றால், முதலாவதாக அங்கு வெளியேறும் பாதை இல்லை. காற்றோட்டமும் குறைவாக உள்ளது. இதனால் புகை விரைவாக குவிகிறது, ஆக்ஸிஜன் அளவு வேகமாக குறைகிறது.

மேலும் பாதிக்கப்பட்டவர்கள் புகையால் மூச்சுத் திணறல் ஏற்படும் அபாயத்தில் உள்ளனர் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset