நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நோன்பு பெருநாள், பள்ளி விடுமுறை நாட்களில் உட்லண்ட்ஸ், துவாஸில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படும்: ஐசிஏ எச்சரிக்கை

சிங்கப்பூர்:

நோன்பு பெருநாள், பள்ளி விடுமுறை நாட்களில் உட்லண்ட்ஸ், துவாஸில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

சிங்கப்பூர் குடிநுழைவு சோதனைச் சாவடிகள் ஆணையம் (ஐசிஏ) இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

வரும் மார்ச் 13 முதல் 22 வரை பள்ளி விடுமுறை, பெருநாள் கொண்டாட்டங்கள் காரணமாக உட்லண்ட்ஸ்,  துவாஸில் உள்ள நில சோதனைச் சாவடிகளைப் பயன்படுத்தும் பயணிகள் அசாதாரண போக்குவரத்து நெரிசலை எதிர்பார்க்கலாம்.

அனைத்து சோதனைச் சாவடிகளிலும் வரும் பயணிகள், சரக்கு,  வாகனங்கள் மீதான பாதுகாப்பு சோதனைகளை மேம்படுத்துவதாகக் கூறியது.

மேற்கு ஆசியாவின் சமீபத்திய முன்னேற்றங்கள் உட்பட, அதிகரித்து வரும் உலகளாவிய பாதுகாப்பு நிலைமையை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குடியேற்ற அனுமதிக்காக நீண்ட காத்திருப்பு நேரத்தை ஐசிஏ எதிர்பார்க்கிறத.

மேலும் பயணம் செய்வதற்கு முன் போக்குவரத்து நிலைமைகளைச் சரிபார்க்க பொதுமக்களை அறிவுறுத்துகிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset