செய்திகள் மலேசியா
பெர்லிஸ் அரசு பொதுப் பணியாளர்களுக்கு அய்டில்ஃபித்ரி உதவி தொகை அறிவிப்பு
காங்கார்:
பெர்லிஸ் மாநில அரசு, மாநில பொதுப் பணியாளர்களுக்கு அய்டில்ஃபித்ரி சிறப்பு நிதி உதவியாக (BKKA) RM1,500 வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த உதவி 13 மார்ச் அன்று வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொகை அனைத்து நிரந்தர, ஒப்பந்த, தற்காலிக, MySTEP பணியாளர்களுக்கும் வழங்கப்படும் என்று முதலமைச்சர் அபு பாக்கர் ஹம்சா தெரிவித்துள்ளார்.
"இந்த நன்கொடை ஈகைத் திருநாளில் பொதுப் பணியாளர்களின் செலவின் சுமையைக் குறைக்க சிறிது உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.
மேலும், இது பெர்லிஸ் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பொதுப் பணியாளர்களின் உழைப்பை ஊக்குவித்து, சிறந்த சேவையைத் தொடர உதவும்," என்று அவர் கூறினார்.
இன்று பெர்லிஸ் மாநில அரசின் மாதாந்திர சேவை கூட்டத்தில் இந்த அறிவிப்பை அவர் தெரிவித்தார்.
இந்த முயற்சி மாநில அரசின் பொதுப் பணியாளர்களின் நலனில் காட்டும் அக்கறை, உறுதிப்பாட்டின் சான்றாகவும் விளங்குகிறது என்றார் அவர்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 9, 2026, 6:18 pm
மத்திய கிழக்கில் மலேசியர்களை வெளியேற்றும் செயல் இறுதி நிலையில் உள்ளது: MKN
March 9, 2026, 5:30 pm
மெக்காலம் பகுதியில் வெளிநாட்டவர் உயிரிழந்த நிலையில் கண்டெடுப்பு: போலிஸ் விசாரணை தீவிரம்
March 9, 2026, 5:27 pm
கிள்ளானில் மூன்று தொழிற்சாலைகள் தீயில் அழிந்து சேதம்
March 9, 2026, 5:26 pm
லாரியில் கடத்திய 124 கிலோ கஞ்சா பூக்கள் பறிமுதல்: மூவர் கைது
March 9, 2026, 5:24 pm
குழந்தை பராமரிப்பு மையத்தில் 4 மாதக் குழந்தை மரணம்: போலிஸ் விசாரணையைத் தீவிரப்படுத்தியது
March 9, 2026, 5:01 pm
1.7 பில்லியன் ரிங்கிட் ஓய்வூதிய சரிசெய்தல் வழக்கில் அரசு வெற்றி
March 9, 2026, 5:00 pm
ஓஷன் இன்ஃபினிட்டி நிறுவனம் எம்.எச்.370 தேடுதல் நடவடிக்கையை நிறுத்தியது
March 9, 2026, 3:50 pm
