நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டிபிகேஎல் ஆலோசனை வாரியக் குழுவில் இடம் பெற இந்தியர்களுக்கு தகுதி இல்லையா?: டத்தோ சிவராஜ்

கோலாலம்பூர்:

டிபிகேஎல் ஆலோசனை வாரியக் குழுவில் இடம் பெற இந்தியர்களுக்கு தகுதி இல்லையா? என்று செனட்டர் டத்தோ சிவராஜ் கேள்வி எழுப்பினார்.

டிபிகேஎல் எனப்படும் கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் ஆலோசனை வாரியக் குழுவில் நியமிக்கப்பட்டவர்களின் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது.

நியமனம் பெற்றவர்களின் புகைப்படங்கள் அடங்கிய போஸ்டர்கள் தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாகி உள்ளது.

குறிப்பாக நியமனம் பெற்றவர்களில் ஓர் இந்தியர் கூட இல்லாதது தான் இதற்கு முக்கிய காரணம்.

கல்வித் தகுதியும் அனுபவமும் கொண்ட இந்திய சமூகத்தின் ஒரு பிரதிநிதி கூட இல்லை என்பது வருத்தமும் அதிர்ச்சியும் அளிக்கிறது.

ஏன் இக்குழுவில் இடம் பெறுவதற்கு இந்தியர்களுக்கு தகுதி இல்லையா என்று சிவராஜ் கேள்வி எழுப்பினார்.

கடந்த 15ஆவது பொதுத் தேர்தலில் 90 சதவீத இந்தியர்கள் நம்பிக்கை கூட்டணிக்கு வாக்களித்தனர். இதன் வாயிலாக மடானி அரசாங்கம் உருவானது.

நம்பிக்கை கூட்டணி நம்பிய இந்தியர்களுக்கு இது தான் பரிசா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset