நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மேரு போலிஸ் நிலையத்தில் சண்டையிட்டதாக 3 ஆடவர்கள் மீது குற்றச்சாட்டு

கிள்ளான்:

கடந்த மார்ச் 2 ஆம் தேதி மேரு போலிஸ்  நிலையத்தில் நடந்த ஒரு சம்பவத்தில், சண்டையிட்டு காயம் ஏற்படுத்தியதாகவும், அரசு சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாகவும் மூன்று ஆடவர்கள் மீது கிள்ளான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்ட 39 வயதான பி. கோபிநாத், 38 வயதான பி. கலைராசன்,  44 வயதான ஏ. மகேந்திரன் ஆகியோர் குற்றமற்றவர்கள் என்று கூறி, அனைத்து குற்றச்சாட்டுகளும் நீதிபதி அசிலா மாட் முன் தனித்தனியாக வாசிக்கப்பட்ட பின்னர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

முதல் குற்றச்சாட்டின்படி, மார்ச் 2 ஆம் தேதி இரவு 9.47 மணியளவில் மேரு போலிஸ்  நிலையத்தில் ஹெல்மெட், இரும்பு கம்பியைப் பயன்படுத்தி ஒரு நபருக்கு காயம் ஏற்படுத்தியதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

அவர்கள் மீது குற்றவியல் சட்டத்தின் பிரிவு 324 இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டது.

இது குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம், சவுக்கடி அல்லது இந்த இரண்டு தண்டனைகளையும் வழங்குகிறது.

ஒரே இடத்தில் சத்தம் போட்டல், சண்டையிடுதல் போன்ற ஒழுங்கீனமான நடத்தைக்கும் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

மேலும் இந்தக் குற்றம் காவல் சட்டம் 1967 பொதுத் தண்டனையின் பிரிவு 94 இன் கீழ் செய்யப்பட்டது. இது 500 ரிங்கிட் அபராதம் அல்லது ஆறு மாதங்களுக்கு மிகாமல் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

கோபிநாத் மீது ஒரு நபருக்கு எதிராக அச்சுறுத்தும் வார்த்தைகளைப் பயன்படுத்தி குற்றவியல் மிரட்டல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

மேலும் இந்தக் குற்றம் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 506 இன் கீழ் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

பின்னர் நீதிமன்றம் கோபிநாத், கலைராசனுக்கு தலா 13,000 ரிங்கிட்  ஜாமீன் வழங்கியது.

அதே நேரத்தில் மகேந்திரனுக்கு 9,000 ரிங்கிட் ஜாமீன் வழங்கப்பட்டது. வழக்கை மே 25 அன்று பரிசீலிக்க தேதியாக நீதிமன்றம் நிர்ணயித்தது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset