நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இணையத்தில் தீவிரவாத பிரச்சாரம்: இளைஞர்கள் உட்பட ஆறு பேர் கைது

கோலாலம்பூர்:

தீவிரவாத அமைப்பு இஸ்லாமிக் ஸ்டேட் (IS) தொடர்பான செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மூன்று இளைஞர்கள் உட்பட ஆறு உள்ளூர் ஆண்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேசிய காவல்துறைத் தலைவர் முஹம்மத் காலித் இஸ்மாயில் தெரிவித்ததாவது, சந்தேக நபர்கள் சமூக ஊடகங்கள், இணைய விளையாட்டுகள், மற்ற தகவல் பரிமாற்ற தளங்களை பயன்படுத்தி தீவிரவாத கருத்துகளை பரப்பியுள்ளனர்.

அவர்கள் வாட்ஸ்அப், டெலிகிராம், டிஸ்கோர்ட் போன்ற தளங்களின் மூலம் தீவிரவாத சிந்தனைகளைப் பரப்பி, பிரச்சார நடவடிக்கைகளிலும் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும், காவல் நிலையங்கள், அரசாங்க வசதிகள், பொதுமக்கள் தொடர்பான இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்த இணையத்தில் விவாதித்ததாகவும் போலிஸ் தெரிவித்துள்ளது.

சோதனையின் போது 11 கைப்பேசிகள், இரண்டு மடிக்கணினிகள், நான்கு இஸ்லாமிக் ஸ்டேட் கொடிகள், மூன்று தீவிரவாத புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த வழக்கு குற்றச் சட்டம் பிரிவு 130J பாதுகாப்பு குற்றங்கள் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset