செய்திகள் மலேசியா
போலி முதலீடு மோசடி: 30 லட்சம் ரிங்கிட்டை இழந்த மருத்துவர்
அலோர் ஸ்தார்:
போலியான முதலீட்டு திட்டத்தில் ஏமாற்றப்பட்டதால், தனியார் மருத்துவர் ஒருவர் 30 லட்சம் ரிங்கிட் பணத்தை இழந்துள்ளார்.
கெடா வணிக குற்றப் புலனாய்வு துறைத் தலைவர் ஷம்சுல் அனுவார் சாத் தெரிவித்ததாவது, இந்த மோசடி தொடர்பாக கோத்தா ஸ்டார் காவல் தலைமையகத்தில் மார்ச் 4-ஆம் தேதி இரவு 9.30 மணியளவில் புகார் அளிக்கப்பட்டது.
60 வயதுடைய அந்த மருத்துவர், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 26 அன்று பணியிடத்தில் இருந்தபோது சமூக வலைத்தளத்தில் வந்த முதலீட்டு விளம்பரத்தை பார்த்ததாக கூறப்படுகிறது.
அதில் முதலீடு செய்தால் இரண்டு வாரங்களில் 50 சதவீத லாபம் கிடைக்கும் என கூறப்பட்டதால், அவர் ஒரு பெண்ணுடன் தொடர்பு கொண்டு பின்னர் அந்த நிறுவனத்தின் தகவல் பரிமாற்றக் குழுவில் இணைக்கப்பட்டார். அதில் உள்ளவர்கள் இந்த முதலீட்டில் அதிக லாபம் கிடைக்கும் என்று அவரை நம்பவைத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு நவம்பர் 4 முதல் இந்த ஆண்டு பிப்ரவரி 4 வரை, அவர் 49 முறை பண பரிமாற்றம் செய்து, ஒன்பது வங்கி கணக்குகளுக்கு 30 லட்சம் ரிங்கிட் தொகையை அனுப்பினார்.
ஆனால் எந்த லாபமும் கிடைக்காததால் தான் ஏமாற்றப்பட்டதை அவர் பின்னர் உணர்ந்தார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 6, 2026, 10:50 pm
அசாம் பாக்கி உடனடியாக பதவி விலக வேண்டும்: பெர்சே
March 6, 2026, 5:19 pm
அதிகாலை தீ விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயம்
March 6, 2026, 5:18 pm
இணையத்தில் தீவிரவாத பிரச்சாரம்: இளைஞர்கள் உட்பட ஆறு பேர் கைது
March 6, 2026, 5:15 pm
பட்டாசு விற்பனை கூடத்தில் திடீர் தீவிபத்து: 26 வயது இளைஞர் காயம்
March 6, 2026, 4:47 pm
