நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அசாம் பாக்கி உடனடியாக பதவி விலக வேண்டும்: பெர்சே

கோலாலம்பூர்:

எம்ஏசிசி தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அசாம் பாக்கி உடனடியாக பதவி விலக வேண்டும்.

பெர்சே ஓர் அறிக்கையின் வாயிலாக இதை தெரிவித்தது.

எம்ஏசிசிக்குள் உள்ள 'கார்ப்பரேட் மாஃபியா' குற்றச்சாட்டுகள் உட்பட நிலுவையில் உள்ள அனைத்து குற்றச்சாட்டுகளையும் விசாரிக்க ஒரு சுயாதீன குழு அல்லது அரச விசாரணை ஆணையத்தை  உடனடியாக நிறுவ வேண்டும்.

எம்ஏசிசி, அதன் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அசாம் பாக்கிக்கு எதிரான நிலுவையில் உள்ள அனைத்து குற்றச்சாட்டுகளையும் விசாரிக்க, சுயாதீன குழு அல்லது  விசாரணை ஆணையம் ஒரு முக்கிய மற்றும் மரியாதைக்குரிய நபரால் வழிநடத்தப்பட வேண்டும்.

அமைச்சர்கள், அரசு ஊழியர்கள், அட்டர்னி ஜெனரலைச் சாராமல் சுயாதீனமாக இருக்க வேண்டும் என்று பெர்சே தெரிவித்தது.

அடுத்து அறிக்கையின்படி அசாம் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் பெர்சே வலியுறுத்தியது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset