நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பட்டாசு விற்பனை கூடத்தில் திடீர் தீவிபத்து: 26 வயது இளைஞர் காயம்

ஷா ஆலம்: 

சபாக் பெர்னாம் மாவட்டம் சுங்கை பெசாரில் பட்டாசு விற்பனை கூடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், 26 வயது இளைஞரின் இரு பாதங்களிலும் தீக்காயம் ஏற்பட்டது.

இந்த சம்பவம் பிற்பகல் 2.55 மணியளவில் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபாக் பெர்னாம் மாவட்ட காவல் துறைத் தலைவர் முஹம்மத் யூசுப் அஹமத் கூறுகையில், பட்டாசு விற்பனைக்காக அமைக்கப்பட்டிருந்த கூடத்தில் தீப்பற்றி எரிந்தது.

ஆனால், அங்கிருந்த வியாபாரிகள் தீ அணைக்கும் கருவியை பயன்படுத்தி தீயை கட்டுப்படுத்தினர். பின்னர் சுங்கை பெசார் தீயணைப்பு, மீட்பு படையினரும் சம்பவ இடத்துக்கு வந்து தீ பரவாமல் தடுத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக குற்றச் சட்டம் பிரிவு 285இன் கீழ் காவல்துறை விசாரணை தொடங்கியுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆறு மாதம் வரை சிறை அல்லது 2,000 ரிங்கிட் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

மேலும், குறிப்பாக திருவிழா காலங்களில் பட்டாசு விற்பனை செய்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என பொதுமக்களுக்கு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset