நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நஜிப்பின் உத்தரவுகள் தேசிய நலனுக்கானவை என எஸ்ஆர்சி வாரியம் நம்புகிறது: இஸ்மி

புத்ராஜெயா:

முன்னாள் பிரதமர் நிறுவனத்தின் மீது ஆதிக்கம் செலுத்தியதால், நஜிப் ரசாக்கின் உத்தரவுகளை வாரியம் பின்பற்றியதாகவும், இந்த உத்தரவுகள் தேசிய நலனுக்கானவை என்று நம்புகிறது.

எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் முன்னாள் இயக்குநர் இஸ்மி இஸ்மாயில் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

நஜிப்பிற்கு எதிராக எஸ்ஆர்சி  இன்டர்நேஷனல், அதன் துணை நிறுவனமான காண்டிங்கன் மென்டாரி தாக்கல் செய்த சிவில் வழக்கில் மூன்றாம் தரப்பு சாட்சியாக சாட்சியம் அளித்த அவர்,

பங்குதாரர்களின் தீர்மானங்களின்படி மட்டுமே வாரியம் செயல்பட்டதாகவும், இல்லையெனில் முடிவுகளை எடுக்க எந்த அதிகாரமும் இல்லை என்றும் கூறினார்.

அப்போது நிதியமைச்சராக இருந்த நஜிப், எஸ்ஆர்சி இன்டர்நேஷனலின் ஒரே பங்குதாரராக இருந்தார்.

எஸ்ஆர்சி இன்டர்நேஷனலின் வழக்கறிஞர் லீ சுவான் குய் குறுக்கு விசாரணை செய்தபோது, ​​பங்குதாரர்களின் தீர்மானங்களுக்கு எதிரான முடிவுகளை இயக்குநர்கள் குழு எடுக்க முடியாது என்பதை இஸ்மி ஒப்புக்கொண்டார்.

நஜிப் அந்த நேரத்தில் 'மூன்று வெவ்வேறு பதவிகளை வகித்ததால் இந்த நிலைமை ஏற்பட்டதாகக் கூறும் தனது சாட்சி அறிக்கையை லீ இஸ்மியிடம் குறிப்பிட்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset