செய்திகள் மலேசியா
அதிகாலை தீ விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயம்
டோங்கோட்:
கம்போங் என்டிலிபொன் பகுதியில் இன்று அதிகாலை ஒரு வீட்டின் தீ விபத்தினால் கணவன், மனைவி, அவர்களின் மகன் படுகாயமடைந்தனர்.
53 வயதான ஹுஜன் சிம்புல், அவரது மனைவி ஜூலியா அஹமத் தீயிலிருந்து தப்பிக்க குதித்தபோது அவர்களின் கழுத்து, இடுப்பு பகுதி காயமடைந்தது. அவர்களின் 20 வயது மகன் ஷாஹ்னிசானின் கால்பாதமும், முகப்பகுதியிலும் தீக்காயம் ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தில் வீடு முழுவதும் எரிந்து நாசமானதுடன் ஐந்து வாகனங்களும் மூன்று மோட்டார் சைக்கிள்களும் தீக்கிரையாகின. இதனால் அருகில் உள்ள ஒரு பள்ளிவாசலும் தீயால் பாதிக்கப்பட்டது.
தீயணைப்பு துறைக்கு அதிகாலை 2.09 மணிக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடம் 121 கிலோமீட்டர் தொலைவில் இருந்ததால், தீயணைப்பு வீரர்கள் 4.19 மணிக்கு அங்கு சென்றனர்.
காயமடைந்த மூவரும் பொதுமக்களின் உதவியுடன் என்டிலிபொன் சுகாதார மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
ஆறு தீயணைப்பு வீரர்கள், தன்னார்வ தீயணைப்பு குழு, பொதுமக்கள் பாதுகாப்புப் படை, காவல்துறையினர் இணைந்து தீயை காலை 6.34 மணிக்கு கட்டுப்படுத்தினர்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 6, 2026, 10:50 pm
அசாம் பாக்கி உடனடியாக பதவி விலக வேண்டும்: பெர்சே
March 6, 2026, 5:18 pm
இணையத்தில் தீவிரவாத பிரச்சாரம்: இளைஞர்கள் உட்பட ஆறு பேர் கைது
March 6, 2026, 5:17 pm
போலி முதலீடு மோசடி: 30 லட்சம் ரிங்கிட்டை இழந்த மருத்துவர்
March 6, 2026, 5:15 pm
பட்டாசு விற்பனை கூடத்தில் திடீர் தீவிபத்து: 26 வயது இளைஞர் காயம்
March 6, 2026, 4:47 pm
