நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வேட்டி சட்டையுடன் கினபாலு மலையேறி மலேசிய சாதனை புத்தகத்தில் நவீந்திரன் இடம் பிடித்தார்

கோலாலம்பூர்:

வேட்டி சட்டையுடன் கினபாலு மலையேறி மலேசிய சாதனை புத்தகத்தில் நவீந்திரன் இடம் பிடித்தார்.

மலையேறும் நடவடிக்கைகளை பொழுதுபோக்காக தொடங்கினேன்.

அதன் பின்னர் இதில் உள்ள நுணுக்கங்களை கற்றுக் கொண்டு மலைகளை  ஏறினேன்.

இந்நிலையில் தான் குடும்பத்தினர் வழங்கிய உற்சாகத்தில் கினபாலு மலையை ஏறும் முயற்சியில் இறங்கினேன்.

குறிப்பாக இந்தியர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையுடன் இந்த மலையை ஏற வேண்டும் என முடிவு செய்தேன்.

இதன் அடிப்படையில் அதற்கான பயிற்சிகளை மேற்கொண்டேன்.

இறுதியாக கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி வேட்டி சட்டையுடன் கினபாலு மலையின் உச்சத்தை அடைந்தேன்.

இந்நிலையில் வேட்டி சட்டையுடன் மலையேறியது மலேசிய சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது.

இச்சாதனைக்கான சான்றிதழும் இன்று வழங்கப்பட்டது என்று நவீந்திரன் கூறினார்.

இதனிடையே இந்த சாதனைக்கு உறுதிதுணையாக இருந்த என் குடும்பத்தாருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் இச்சாதனையை என் தந்தை கிருஷ்ணனுக்கு சமர்பிக்கிறேன் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset