நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆலயத்திற்கு எதிரான ஆர்பாட்டங்கள்; நாட்டின் அமைதியை சீர்குலைக்கும்: டத்தோ சரவணக்குமார்

நீலாய்:

ஆலயத்திற்கு எதிரான ஆர்பாட்டங்கள் நாட்டின் அமைதியை மட்டுமே சீர்குலைக்கும்.

சிரம்பான் தொகுதி பெர்சத்து சயாப் பிரிவுத் தலைவரும் நீலாய் சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளருமான டத்தோ சரவணக்குமார் இதனை வலியுறுத்தினார்.

மலேசியா பல்வேறு இனங்கள், மதங்களை அடிப்படையாகக் கொண்ட நாடாகும்.

எனவே எந்தக் கட்சியும் தங்களை வீரர்களாகக் காட்டிக்கொண்டு மத அல்லது இன உணர்வுகளை முன்னிறுத்த வேண்டிய அவசியமில்லை.

இத்தகைய தூண்டுதல்கள் பிரச்சினைகளைத் தீர்க்காது. மாறாக, நாட்டைப் பாதிக்கக்கூடிய கோபத்தையும் வெறுப்பையும் அதிகரிக்கும்.

நாளை புக்கிட் மெர்தாஜாம் மருத்துவமனை முன்புள்ள ஆலயம் தொடர்பில் நடைபெறவிருக்கும்  போராட்டம் குறித்து அவர் இவ்வாறு கூறினார்.

இந்தத் திட்டமிடப்பட்ட கூட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

அனைத்து தரப்பினரும் கலவரத்தை உருவாக்குவதில் இருந்து விலக வேண்டும்.

மேலும், எந்தவொரு தூண்டுதலான கூட்டமும் நடைபெறாத வகையில் போலிசார் உரிய  நடவடிக்கையை எடுக்க வேண்டும் என அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset