செய்திகள் மலேசியா
கோலகங்சார் கம்போங் பாரு லீமான் கட்டி மகா மாரியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக பெருவிழா கோலாகலமாக நடைபெற்றது: முனியான்டி
கோலகங்சார்:
பேரா, கோலகங்சார் கம்போங் பாரு லீமான் கட்டி மகா மாரியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக பெருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
சுமார் 80 ஆண்டு கால பழமை வாய்ந்த இந்த ஆலய கும்பாபிஷேகத்தைக் கான பெரும் திரளான பக்தர்கள் வருகை புரிந்தனர்.
இன்று காலை 11 மணியளவில் மகா மாரியமன் விமான கோபுரத்திற்கும் பரிவார மூர்த்தி விமானங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் இனிதே நடைபெற்றது.தொடர்ந்து ஸ்ரீ மகா மாரியம்மன் மூலாலய பரிவார மூர்த்திகளுக்கும் நடைபெற்றது.
இந்த கிராமத்தில் எழுந்தருளியுள்ள இந்த ஆலயம் சுமார் 80 ஆண்டுகளுக்கு முன் தோற்றுவிக்கப்பட்டு பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ம.இ.கா.வின் முன்னாள் தேசியத் தலைவர் துன் சாமிவேலு முயற்சியால் கடந்த. 6-3-2003 இல் முதல் கும்பாபிஷேகம் நடைபெற்றதாக ஆலயத் தலைவர் மு. முனியாண்டி கூறினார்.
இந்த ஆலயத்திற்கு மறு கும்பாபிஷேகத்தை நடத்த ஆலய நிர்வாகம் மேற்கொண்ட முயற்சி இன்று நிறைவுப் பெற்றதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த கும்பாபிஷேகம் சிறப்புடன் நடைபெற பொது மக்கள் ஆதரவு வழங்கிய வேளையில் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன் ஒரு லட்சம் வெள்ளி மானியம் வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்..
இந்த்நிகழ்வில் டத்தோ அ. சிவநேசனை பிரதிநிதித்து கலத்துக்கொண்ட அவரின் சிறப்பு அதிகாரி செய்தியாளர்களிடம் பேசியபோது, நாட்டில் தலையுள்ள ஆலய நில விவகாரங்களுக்கு தீர்வுக்கான முறையான நடவடிக்கை எடுத்து வருவதாக விளக்கம் அளித்தார்.
பேரா மாநிலத்தை பொறுத்த வரை ஆலய விவகாரங்களுக்கு தீர்ரவுக்கான டத்தோ அ. சிவநேசன் தலைமையில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ள தகவலை நினைவுப்படுத்தினார்.
தற்பொழுது ஆலயங்கள் நிர்வப்பட்டால் முறையான அனுமதி பெற்று எதிர்காலத்தில் எவ்வித சிக்கலும் இன்றி இருக்க பாதுகாப்பாக கட்டப்படவேண்டும் என்று ஆலோசனை வழங்கினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 6, 2026, 10:50 pm
அசாம் பாக்கி உடனடியாக பதவி விலக வேண்டும்: பெர்சே
March 6, 2026, 5:19 pm
அதிகாலை தீ விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயம்
March 6, 2026, 5:18 pm
இணையத்தில் தீவிரவாத பிரச்சாரம்: இளைஞர்கள் உட்பட ஆறு பேர் கைது
March 6, 2026, 5:17 pm
போலி முதலீடு மோசடி: 30 லட்சம் ரிங்கிட்டை இழந்த மருத்துவர்
March 6, 2026, 5:15 pm
பட்டாசு விற்பனை கூடத்தில் திடீர் தீவிபத்து: 26 வயது இளைஞர் காயம்
March 6, 2026, 4:47 pm
