நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

“குப்பையை சரியான இடத்தில் போடத் தெரியாதவர்கள் கீழ்த்தரமானவர்கள்”: குப்பை சேகரிப்பாளர் வான் ஒத்மான்

குவாந்தான்: 

குப்பை சேகரிப்பாளராகப் பணிபுரிவதைத் தேர்ந்தெடுத்ததில் எந்த அவமானமோ அல்லது தாழ்வு உணர்ச்சியோ இல்லை என்று 23 வயதான வான் ஒத்மான் முஹம்மத் நூர் ஹஷிம் கூறுகிறார்.

மாறாக, கடந்த நான்கு ஆண்டுகளாக குடும்பத்துக்கு உதவுவதற்காகவே அவர் இந்த வேலையைச் செய்து வருவதாக தெரிவித்தார்.

“இவ்வேலையைத் தேர்ந்தெடுத்தற்காக நான் வெட்கப்படவில்லை. குடும்பத்துக்கு உதவ ஹலாலான முறையில் பணிபுரிந்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்று உறுதியுடன் இருக்கிறேன்.

“இந்த வேலையை இழிவாகப் பார்க்கும் சிலரைவிட, குப்பையைச் சரியான இடத்தில் போடத் தெரியாதவர்கள்தான் இன்னும் இழிவானவர்கள் என்று நான் நினைக்கிறேன்.

“உண்மையில், இந்த வேலையால் என்னால் என் தந்தை, தாய், சகோதர சகோதரிகளுக்கு உதவ முடிகிறது. எல்லாம் குடும்பத்திற்காகத்தான். ஏனெனில் என் தந்தை புல் வெட்டும் வேலை, கால்வாய்களைச் சுத்தம் செய்யும் வேலை மட்டுமே செய்கிறார்; என் தாய் ஒரு இல்லத்தரசி.

“நான் 18 வயதில் இருந்தபோதே குப்பை சேகரிப்பாளராக வேலை செய்யத் தொடங்கினேன்,” என்று அவர் கூறினார். அவர் இரவு 9.30 மணி முதல் காலை 6 மணி வரை வேலை செய்வதைத் தேர்ந்தெடுத்துள்ளார்.

சுத்தம் செய்யும் பணியாளராக அவர் எதிர்கொள்ளும் அறைகூவல்கள் குறித்து கேட்டபோது, சிலர் தூய்மையைப் பேணாமல் இருப்பது, குறிப்பாக குப்பை பைகளைக் கட்டாமல் குப்பை தொட்டிக்குள் போடுவது போன்ற செயல்கள் பிரச்சினையாக இருப்பதாக அவர் ஒப்புக்கொண்டார்.

இதற்கிடையில், குவாந்தான் Alam Flora Sdn Bhd நிறுவனத்தின் செயல்பாட்டு நிர்வாகி கைருல் ஹஜ்ரின் கைருட்டின், வான் ஒத்மானின் பொறுப்புணர்வும் நேர்மையும் கொண்ட பணிசெயல் குறித்து பெருமை தெரிவித்தார்.

“Alam Flora நிறுவனத்தில் குப்பை சேகரிக்கும் பணியாளர்களில் பெரும்பாலோர் 18 முதல் 23 வயதுக்குள் உள்ளவர்கள். இந்த வேலைக்கு அதிக உடல் உழைப்பைத் தேவைப்படுகிறது,” என்றும் அவர் கூறினார்.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset