நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மிரி தோட்டத்தில் தீ விபத்து: 18 அறைகள் கொண்ட தொழிலாளர் குடியிருப்பு முற்றிலும் அழிவு

மிரி: 

பிரைமலக் தோட்டத்தில் உள்ள தொழிலாளர் குடியிருப்பில் நேற்று பிற்பகல் ஏற்பட்ட தீ விபத்தில், 39 தொழிலாளர்கள் தங்கள் உடமைகளை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.

செயல்பாட்டு தளபதி லாடி எனி தெரிவித்ததாவது, சம்பவ இடத்துக்கு சென்றபோது 18 அறைகள் கொண்ட ஒரு தொழிலாளர் குடியிருப்பு கட்டிடம் முழுவதுமாக தீயில் எரிந்திருந்தது.

தீயணைப்பு வீரர்கள் பின்னர் மீதமுள்ள தீச்சுடர்கள் மீண்டும் பரவாமல் இருக்க முழுமையாக தீயை அணைக்கும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர். இந்த சம்பவத்தில் உயிரிழப்பு அல்லது காயம் எதுவும் பதிவாகவில்லை.

மதியம் 1.15 மணியளவில் அவசர அழைப்பு கிடைத்ததைத் தொடர்ந்து, லோபெங் தீயணைப்பு, மீட்பு நிலையத்திலிருந்து வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டன.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset