செய்திகள் மலேசியா
காப்பாரில் சட்டவிரோத மின்னணு கழிவு செயலாக்கம் முறியடிப்பு: 60 இலட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்
ஷா ஆலம்:
காப்பார் பகுதியில் சட்டவிரோதமாக மின்னணு கழிவுகளை செயலாக்கிய கும்பலின் நடவடிக்கையை கிள்ளான் துறைமுக கடல் காவல் படை (PPM) முறியடித்து, சுமார் 60 இலட்சம் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.
கிள்ளான் துறைமுக கடல் காவல் போலீசார், கிள்ளான் வடக்கு மாவட்ட போலீசார், சிலாங்கூர் சுற்றுச்சூழல் துறையுடன் இணைந்து காப்பார் பெஸ்தாரி தொழிற்பகுதியில் உள்ள ஒரு வளாகத்தில் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.
அதில் 26 வயதுடைய உள்ளூர் நபர் ஒருவரும், உரிய அடையாள ஆவணங்கள், வேலை அனுமதி இல்லாத 38 வெளிநாட்டு தொழிலாளர்களும் கைது செய்யப்பட்டனர்.
சோதனையில் 120 டன் செம்பு, 560 டன் செயலாக்கப்பட்ட அலுமினியம், 811 டன் செயலாக்கப்படாத அலுமினியம் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் 60 இலட்சம் ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வளாகத்தில் சேமிக்கப்பட்டு செயலாக்கப்பட்ட பொருட்கள் தொடர்பான ஆவணங்களை பொறுப்பாளர் சமர்ப்பிக்க முடியாததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய இந்த சட்டவிரோத நடவடிக்கை தொடர்பான வழக்கு மேலதிக நடவடிக்கைக்காக சுற்றுச்சூழல் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 6, 2026, 2:00 pm
ஆலயம் தொடர்பான சர்ச்சைகள்; அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான சதியா?: டத்தோஸ்ரீ சரவணன் கேள்வி
March 6, 2026, 12:52 pm
கோலாலம்பூர் விமான நிலையத்தில் அரிய வகை விலங்கு கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டது
March 6, 2026, 11:19 am
ஐரோப்பா பயணிகளுக்காக கூடுதல் விமான சேவைகள் அதிகரிப்பு: மலேசியா ஏர்லைன்ஸ் அறிவிப்பு
March 6, 2026, 10:27 am
மதுபோதையில் வாகனம் ஓட்டிய லாரி ஓட்டுநருக்கு RM10,000 ரிங்கிட் அபராதம்
March 6, 2026, 10:16 am
மிரி தோட்டத்தில் தீ விபத்து: 18 அறைகள் கொண்ட தொழிலாளர் குடியிருப்பு முற்றிலும் அழிவு
March 6, 2026, 10:04 am
