செய்திகள் மலேசியா
கோலாலம்பூர் விமான நிலையத்தில் அரிய வகை விலங்கு கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டது
செப்பாங்:
பப்புவா நியூ கினியாவின் காடுகளில் வாழும் கஸ்கஸ் இனத்தைச் சேர்ந்ததாக சந்தேகிக்கப்படும் இரண்டு விலங்குகளை சட்டவிரோதமாக கடத்த முயன்ற சம்பவம் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் முனையம் 1-இல் முறியடிக்கப்பட்டது.
வனவிலங்கு பாதுகாப்புத் துறை இயக்குநர் டத்தோ அப்துல் காதிர் அபு ஹாஷிம் தெரிவித்ததாவது, 68 வயதுடைய உள்ளூர் நபர் ஒருவர் இரவு 8.40 மணியளவில் கைது செய்யப்பட்டார். அவர் தனது பயணப்பைகளில் இரண்டு கஸ்கஸ் விலங்குகளை மறைத்து இந்தியாவின் திருச்சிராப்பள்ளியை நோக்கி பயணிக்க முயன்றதாக கூறப்படுகிறது.
விமான நிலைய கண்காணிப்பு கருவியில் சந்தேகத்திற்கிடமான பொருள் காணப்பட்டதைத் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டதில், இரண்டு பிளாஸ்டிக் பெட்டிகளில் விலங்குகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
கைது செய்யப்பட்ட நபர் இந்தியாவில் பிறந்தவர் என்றாலும் மலேசிய குடியுரிமை பெற்றவர் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதேபோன்ற சம்பவமாக, கடந்த ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக விமான நிலையத்தில் விலங்கு கடத்தல் முயற்சி தடுக்கப்பட்டுள்ளது. முன்பு 38 வயதுடைய உள்ளூர் பெண் ஒருவர் நான்கு சியாமாங் குரங்குகளை இந்தியாவின் திருச்சிராப்பள்ளிக்கு கடத்த முயன்றபோது கைது செய்யப்பட்டிருந்தார்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 6, 2026, 2:36 pm
எம்ஏசிசி அரசாங்கத்தின் அரசியல் ஆயுதம் அல்ல; பெர்சேவின் அறிக்கை நியாயமற்றது:பிரதமர்
March 6, 2026, 2:34 pm
அரசாங்கத்தை சீர்குலைப்பவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுங்கள்: ஜாஹித்
March 6, 2026, 2:00 pm
ஆலயம் தொடர்பான சர்ச்சைகள்; அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான சதியா?: டத்தோஸ்ரீ சரவணன் கேள்வி
March 6, 2026, 12:54 pm
