செய்திகள் மலேசியா
மன்னிப்பு கேட்காததால் மாணவர் தாக்கப்பட்டாரா?: பெக்கானில் அதிர்ச்சி சம்பவம்
குவாந்தான்:
பெக்கானில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்தில் 16 வயது மாணவர் ஒருவரை இரு மூத்த மாணவர்கள் தாக்கியதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெக்கான் மாவட்ட காவல் துறைத் தலைவர் சூப்பிரிண்டெண்ட் ஜைதி மாட் சின் தெரிவித்ததாவது, இந்த சம்பவம் குறித்து மதியம் 1.05 மணியளவில் புகார் பெறப்பட்டதாக கூறினார்.
அறிக்கையின் படி, கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில், 19 வயதுடைய இரு மூத்த மாணவர்கள் பாதிக்கப்பட்ட மாணவரை கல்வி நிறுவனத்தின் பின்புறத்திற்கு அழைத்துள்ளனர். அங்கு சென்றபோது, அவரை பலமுறை அடித்தும் தள்ளியும் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தாக்குதலின் காரணமாக மாணவரின் இடது கழுத்து, இடது மார்பு, இடது கை, வலது முழங்கால் பகுதியில் காயங்கள் ஏற்பட்டுள்ளன.
மேலும் நடைபெற்ற விசாரணையில், கல்வி நிறுவன வளாகத்தில் மின்னணு சிகரெட்டுகளை பயன்படுத்திய தவறுக்காக ஆசிரியரிடம் மன்னிப்பு கேட்காததால் சந்தேக நபர்கள் அதிருப்தியடைந்ததாக கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட மாணவரிடமும், சம்பந்தப்பட்ட இரு மாணவர்களிடமிருந்து காவல் துறை வாக்குமூலம் பதிவு செய்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பான விசாரணை குற்றச் சட்டம் பிரிவு 323இன் கீழ் நடைபெற்று வருகிறது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 6, 2026, 2:00 pm
ஆலயம் தொடர்பான சர்ச்சைகள்; அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான சதியா?: டத்தோஸ்ரீ சரவணன் கேள்வி
March 6, 2026, 12:52 pm
கோலாலம்பூர் விமான நிலையத்தில் அரிய வகை விலங்கு கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டது
March 6, 2026, 11:19 am
ஐரோப்பா பயணிகளுக்காக கூடுதல் விமான சேவைகள் அதிகரிப்பு: மலேசியா ஏர்லைன்ஸ் அறிவிப்பு
March 6, 2026, 10:27 am
மதுபோதையில் வாகனம் ஓட்டிய லாரி ஓட்டுநருக்கு RM10,000 ரிங்கிட் அபராதம்
March 6, 2026, 10:16 am
