நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஐரோப்பா பயணிகளுக்காக கூடுதல் விமான சேவைகள் அதிகரிப்பு: மலேசியா ஏர்லைன்ஸ் அறிவிப்பு

கோலாலம்பூர்: 

உலகளாவிய பயண வலையமைப்பில் ஏற்பட்ட சிக்கல்களால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உதவ, மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனம் கோலாலம்பூர்–லண்டன், கோலாலம்பூர்–பாரிஸ் வழித்தடங்களில் இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரை கூடுதல் விமானங்களை இயக்குகிறது.

இந்த நடவடிக்கை, சர்வதேச பயணங்களில் நிலவும் உறுதியற்ற நிலையை எதிர்கொள்ளும் பயணிகளுக்கு உதவுவதுடன், ஆசியா, ஐரோப்பாவுக்கிடையிலான பயண இணைப்பைத் தொடர்ச்சியாக வைத்திருக்கவும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கூடுதல் விமானங்கள் லண்டன் ஹீத்ரோ, பாரிஸ் சார்ல்ஸ் டி கோல் விமான நிலையங்களுக்கு இயக்கப்படுகின்றன. இவை தினசரி இயங்கும் வழக்கமான சேவைகளுக்கு மேலாக இடம்பெறும். அனைத்து கூடுதல் சேவைகளும் ஏர்பஸ் ஏ350–900 வகை விமானங்கள் மூலம் இயக்கப்படுகின்றன.

மலேசியா ஏவியேஷன் குழுமத்தின் விமான சேவை பிரிவு தலைமை நிர்வாக அதிகாரி பிரையன் ஃபூங் கூறுகையில், உலகளாவிய நிலைமைகள் உறுதியற்ற நிலையில் இருந்தாலும் விமானப் போக்குவரத்து உலகத்தை இணைக்கும் முக்கிய பங்காற்றுகிறது என்றார்.

மேலும், ஐரோப்பா, ஆசியாவில் உள்ள கூட்டாண்மை விமான நிறுவனங்களுடன் இணைந்து பாதிக்கப்பட்ட பயணிகளின் அடுத்தடுத்த பயணங்களை எளிதாக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பயணிகள் மலேசியா ஏர்லைன்ஸ் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது அதன் கைப்பேசி செயலி மூலம் முன்பதிவு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset