நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தாப்பாவில் 20 பள்ளிவாசல்கள், 92 சூராவ்களுக்கு நோன்பு பெருநாள் உதவி நிதி: டத்தோஶ்ரீ சரவணன் வழங்கினார்

தாப்பா:

தாப்பா நாடாளுமன்ற தொகுதியில் உள்ள 20 பள்ளிவாசல்கள், 92 சூராவ்களுக்கு நோன்பு பெருநாள் உதவி நிதியை அதன் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எம். சரவணன் இன்று வழங்கினார்.

இன்று தாப்பாவில் நடைபெற்ற பள்ளிவாசல், சூராவ்களின் பொறுப்பாளர்களை சந்தித்தப் பின்னர் இந்த உதவி நிதியை அவர் எடுத்து வழங்கினார் .

ஒவ்வொரு பெருநாள் காலங்களில் இந்த உதவி நிதியை  நான் வழங்கி வருகிறேன்.

கடந்த 2008ஆம் ஆண்டு இத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றது முதல் இந்த உதவி நிதியை தாம் வழங்குவதாக  மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ சரவணன் செய்தியாளர்களிடம் கூறினார்.

நோன்பு காலத்தில் பள்ளிவாசல்கள், சூராவ்களில் வாயிலாக மக்களுக்கு நலத் திட்டங்களை மேற்கொள்ளும் நோக்கில் இந்த உதவி நிதி வழங்கப்படுகிறது.

இந்த உதவி நிதி நிச்சயம் அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும் என தாம் நம்புவதாக டத்தோஶ்ரீ சரவணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset