செய்திகள் மலேசியா
மதுபோதையில் வாகனம் ஓட்டிய லாரி ஓட்டுநருக்கு RM10,000 ரிங்கிட் அபராதம்
மலாக்கா:
மதுபோதையில் வாகனம் ஓட்டிய குற்றத்தை ஒப்புக்கொண்ட லாரி ஓட்டுநருக்கு ஆயிர் கெரோ நீதிமன்றம் ஒரு நாள் சிறைத் தண்டனையும் RM10,000 ரிங்கிட் அபராதமும் விதித்தது.
33 வயதுடைய கஜேந்திரநாத் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நீதிபதி நூர் அபிகா ராதியா ஜைனுரின் இந்தத் தீர்ப்பை வழங்கினார்.
அபராதத்தை செலுத்தத் தவறினால் ஏழு மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் குற்றவாளி அபராதத்தை செலுத்தினார்.
கடந்த ஜனவரி 17ஆம் தேதி இரவு சுமார் 11.50 மணியளவில் டத்தோ முஹம்மத் சின் சாலையில் அவர் மதுபோதையில் வாகனத்தை ஓட்டியதாக குற்றம் சாட்டப்பட்டது.
சோதனையில் அவரது இரத்தத்தில் 100 மில்லிலிட்டருக்கு 74 மில்லிகிராம் மதுபான அளவு இருப்பது கண்டறியப்பட்டது. இது அனுமதிக்கப்பட்ட 50 மில்லிகிராம் அளவை விட அதிகமாகும்.
சாலை சோதனை நடவடிக்கையில் காவல்துறை அவரை சந்தேகத்தின் பேரில் தடுத்து பரிசோதித்தபோது முதற்கட்ட சோதனையில் 108 மில்லிகிராம் மதுபான அளவு பதிவாகியதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் மேலதிக பரிசோதனையில் 74 மில்லிகிராம் அளவு உறுதிப்படுத்தப்பட்டது.
தண்டனை விதிக்குமாறு அரசு தரப்பு கோரிய நிலையில், வழக்கறிஞர் இல்லாமல் ஆஜரான குற்றவாளி தன் பெற்றோரைக் கவனிக்க வேண்டிய நிலை இருப்பதாகக் கூறி தளர்வு கோரினார்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 6, 2026, 2:00 pm
ஆலயம் தொடர்பான சர்ச்சைகள்; அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான சதியா?: டத்தோஸ்ரீ சரவணன் கேள்வி
March 6, 2026, 12:52 pm
கோலாலம்பூர் விமான நிலையத்தில் அரிய வகை விலங்கு கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டது
March 6, 2026, 11:19 am
ஐரோப்பா பயணிகளுக்காக கூடுதல் விமான சேவைகள் அதிகரிப்பு: மலேசியா ஏர்லைன்ஸ் அறிவிப்பு
March 6, 2026, 10:16 am
மிரி தோட்டத்தில் தீ விபத்து: 18 அறைகள் கொண்ட தொழிலாளர் குடியிருப்பு முற்றிலும் அழிவு
March 6, 2026, 10:04 am
