நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

“முன்னாள் உறுப்பினர்கள் திரும்ப கட்சியில் இணையலாம்”: அம்னோ தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அஹமத் ஜாஹிட்

கோலாலம்பூர்: 

அம்னோ கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் கட்சியில் சேரலாம் என்று அதன் தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அஹமத் ஜாஹித் ஹமிடி அறிவித்துள்ளார்.

‘இன ஒற்றுமை இல்லம்’ எனப்படும் முயற்சியின் கீழ், எந்த நிபந்தனையும் இன்றி முன்னாள் உறுப்பினர்கள் திரும்ப வருவதற்கு கட்சி கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். கட்சியின் இலக்குகளை ஆதரிக்க விரும்பும் பிறரும் இணைந்து கொள்ளலாம் என்றும் கூறினார்.

இந்நடவடிக்கை ரமலான் மாதத்தின் மன்னிப்பு, ஒற்றுமை உணர்வை முன்னிறுத்தி, கடந்த கால கருத்து வேறுபாடுகளை மறந்து புதிய தொடக்கத்தை உருவாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டதாக அவர் விளக்கினார்.

மேலும், கடந்த ஜனவரி மாதத்தில் நடைபெற்ற கட்சியின் பொதுக்கூட்டத்தில் இந்த ஒற்றுமைக் குழு அமைக்கப்பட்டதாகவும், முன்னாள் உறுப்பினர்கள் தனிப்பட்ட முறையிலும் அல்லது குழுவாகவும் மீண்டும் இணையும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்த முயற்சியின் விளைவு வரவிருக்கும் மலாக்கா மாநிலத் தேர்தலில் ஆரம்பமாக மதிப்பீடு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset