நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆலயம் தொடர்பான சர்ச்சைகள்; அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான சதியா?: டத்தோஸ்ரீ சரவணன் கேள்வி

தாப்பா:

நாட்டில் நிகழ்ந்து வரும் ஆலயம் தொடர்பான சர்ச்சைகள் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான சதியா என்று தாப்பா நாடாளு டத்தோஸ்ரீ எம். சரவணன் கேள்வி எழுப்பினார்.

நாடு சுதந்திரம் அடைந்தது முதல் இஸ்லாம் தேசிய மதம் என்பதை இந்துக்கள் மறந்தது கிடையாது.

மற்ற மதத்தினரும் தங்களின் வழிபாடுகளை தொடர்வதற்கு பல்வேறான வாய்ப்புகளை அரசாங்கம் ஏற்படுத்தி தந்துள்ளது.

அதே வேளையில் நாட்டின் மேம்பாட்டிற்கு இந்துக்களும் இந்து ஆலயங்களும் ஒருபோதும் தடையாக இருந்தது இல்லை.

குறிப்பாக பத்துமலை என்பது மலேசிய இந்தியர்களின் உலக அடையாளமாகும்.

பொதுப்பணி அமைச்சராக துன் சாமிவேலு இருந்த காலக்கட்டத்தில் பத்துமலை வாசலில் மேம்பாலம் அமைக்கப்பட்டது.

அந்நிலம் ஆலயத்திற்கு சொந்தமானதாக இருந்தாலும் அந்நிலத்தை ஆலய நிர்வாகம் விட்டுக் கொடுத்தது.

இந்த சகிப்புத் தன்மையும் நாட்டின் மேம்பாட்டிற்கு ஒத்துழைப்பை நாம் வழங்கியுள்ளோம்.

ஆனால் இன்று நடக்கும் சம்பங்களை பார்க்கும் போது அரசங்கத்தை கவிழ்ப்பதற்கான ஜம்ரி வினோத், பிர்டாவ்ஸ் வோங் ஆகியோர் ஏவப்பட்டுள்ளனரா என்ற சந்தேகம் பரவலாக எழுகிறது.

அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான முயற்சிகள் நடத்து வருவதாக அண்மைய காலமாக செய்திகள் வந்துக் கொண்டிருக்கின்றன.

ஒரு வேளை இந்த நடவடிக்கைகளும் அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சியாக இருக்கலாம் என்ற சந்தேகங்கள் எழுகின்றன.

ஆகவே பிரதமர், அரசாங்கம், போலிஸ்படை இந்த விவகாரத்தை முழுமையாக ஆராய வேண்டும்.  ஜம்ரி வினோத், பிர்டாவ்ஸ் வோங் ஆகியோர் பின்னால் யார் இருக்கின்றனர் என்பதை கண்டுப்பிடிக்க வேண்டும்.

70 வருடங்கள் இல்லாத பிரச்சினை இப்போது எழுகிறது என்றால் இவர்கள் பின்னால் யார் உள்ளனர் என்பதை ஆராய வேண்டும்.

முடிந்தால் அவர்களை தடுப்புக் காவலில் வைத்து முழுமையான விசாரணைகளை நடத்த வேண்டும் என டத்தோஶ்ரீ சரவணன் வலியுறுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset