செய்திகள் மலேசியா
மேற்கு ஆசிய மோதலிலிருந்து பாடம் பெறுங்கள், தேசிய ஒற்றுமையை வலுப்படுத்துங்கள்: பிரதமர் அன்வார்
கோலாலம்பூர்:
மேற்கு ஆசியாவில் நடைபெறும் மோதல்களையும், குறிப்பாக காசாவை மையமாகக் கொண்டு பாலஸ்தீனத்தில் நீண்டகாலமாக நடைபெற்று வரும் துயரங்களையும் எடுத்துக்காட்டாகக் கொண்டு, நாட்டின் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்துமாறு மலேசிய மக்களைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார்.
உலக அரசியல் நிலைமைகள் நாளுக்கு நாள் அசாதாரணமாக மாறிக் கொண்டிருக்கும் சூழலில், அரசியல், இன அல்லது மத வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல் மலேசியா ஒருமித்த நிலையில் நிலைத்திருக்க வேண்டும் என்று அவர் கூறினார். இதன் மூலம் சட்டத்தின் ஆட்சியையும் நாட்டின் நலன்களையும் பாதுகாக்க முடியும் என அவர் தெரிவித்தார்.
“இத்தகைய பதற்றமான சூழ்நிலையில், மலேசியா போன்ற சிறிய நாடுகள் மக்களின் ஒற்றுமையின் வலிமையுடன் உறுதியாக நிற்க வேண்டும்,” என்று அவர் (வியாழக்கிழமை) இங்கு நடைபெற்ற ‘Amanat Perdana Menteri Bersama Warga Felda’ நிகழ்ச்சியில் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் நாட்டின் தலைமைச் செயலாளர் டான் ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்காருடன் FELDA தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மத் ஷபெரி சீக் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
உலகில் எந்த நாடும் கடந்த 70 ஆண்டுகளாக பாலஸ்தீன மக்கள் எதிர்கொண்டு வரும் கொடுமைகள், நில அபகரிப்பு, தொடர்ச்சியான அழிவுகளை அனுபவித்ததில்லை என்று அன்வார் கூறினார். இதில் குழந்தைகள் கொலை செய்யப்பட்டதும், மருத்துவமனைகள், பள்ளிகள் அழிக்கப்பட்டதும் அடங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
“ஆதலால் ரமலான் மாதத்தில் ஒரு கணம் யோசித்து, மனித சமூகம் எதிர்கொள்கிற நிலையை நினைவில் கொள்ளுங்கள். ஏன் நாம் ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும், நம்மையும் நம் நாட்டையும் சுத்தமாக்க வேண்டும் என்பதையும் சிந்தியுங்கள்.
“நமக்கு திறன் உள்ளது. FELDA, மருத்துவமனைகள், பள்ளிகளைப் பாதுகாக்கிறோம். அங்குள்ள நாடுகளில் போல் தினமும் அழிவுகள் எதுவும் இல்லை. இந்தச் சூழ்நிலையை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதையே நான் மனமாறச் சொல்ல விரும்புகிறேன்,” என்றார் அவர்.
ரமலான் மாதம் விழிப்புணர்வை அதிகரிக்கவும், நல்ல செயல்களை வளர்த்தெடுக்கவும், நாட்டின் பாதுகாப்பிற்கும் சமூகத்தின் நலனிற்கும் உலக முஸ்லிம் சமூகத்திற்கும் பிரார்த்தனை செய்யும் ஒரு வாய்ப்பாக இருக்க வேண்டும் என்றும் பிரதமர் கூறினார்.
ஒற்றுமை, நேர்மை, வலுவான மதிப்புகளின் அடிப்படையில் மட்டுமே மலேசியா உலகளாவிய சவால்களை எதிர்கொண்டு அமைதியாகவும் வலிமையாகவும் தொடர முடியும் என்று அவர் தெரிவித்தார்.
கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி அதிகாலயில் இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரானில் உள்ள சில இலக்குகளை நோக்கி வான்வழி தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
இதற்குப் பதிலடியாக, தெஹ்ரான் பல அரபு நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள், லாஜிஸ்டிக் வசதிகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாகவும், இதன் காரணமாக அந்தப் பகுதி முழுவதும் வான்வழிப் பயணங்களுக்குத் தடைகள் விதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 5, 2026, 5:48 pm
RM4 லட்சத்துக்கு மேல் மதிப்புள்ள பட்டாசுகள் பறிமுதல்: இரண்டு பேர் கைது
March 5, 2026, 5:47 pm
பயிற்சி தகராறு வன்முறையாக மாறியது: எட்டு பேருக்கு எதிராக இராணுவ வீரர் வழக்கு தொடுத்துள்ளார்
March 5, 2026, 5:46 pm
பாதுகாப்பு காவலர் உரிமை விவகாரம் கைகலகலப்பில் முடிந்தது: 8 பேர் கைது
March 5, 2026, 5:38 pm
உலக போர் விளைவு: மலேசியாவில் உணவு பாதுகாப்பு நிலைமை சீராக உள்ளது
March 5, 2026, 5:36 pm
“முஹைதீன் இனி பிரதமர் வேட்பாளர் அல்ல”: டத்தோ அஹமத் சம்சூரியின் விளக்கம்
March 5, 2026, 5:00 pm
தொழுகையில் இருந்த பெண்ணைத் தொந்தரவு செய்த மர்மநபர்: போலிஸ் தீவிர தேடல்
March 5, 2026, 2:44 pm
