செய்திகள் மலேசியா
RM 2.72 மில்லியன் மதிப்புள்ள கடத்தல் பொருட்கள் பறிமுதல்: JKDM
கிள்ளான் துறைமுகம்:
சிலாங்கூரில் உள்ள மத்திய மண்டலப் பிரிவு II-இன் அரச மலேசிய சுங்கத் துறை, 'Ops Terma', 'Ops Petasan' கீழ் நடத்தப்பட்ட தனித்தனி சோதனைகளில் லாரிகள், வேன்கள், சுங்க வரிகள் உட்பட RM2.7 மில்லியன் மதிப்புள்ள பல்வேறு பொருட்களைக் கடத்தும் மூன்று முயற்சிகளை முறியடித்தது.
சுங்க (இறக்குமதி தடை) ஆணை 2023 இன் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள பொருட்களுக்கான செல்லுபடியாகும் இறக்குமதி அனுமதியை இறக்குமதியாளர் சமர்ப்பிக்கத் தவறியதற்காகப் பறிமுதல் செய்யப்பட்டதாகச் சிலாங்கூர் சுங்க இயக்குநர் முஹம்மத் அசார் அஹம்மத் பஹராசி தெரிவித்தார்.
ஜனவரி 7 ஆம் தேதி முதல் வழக்கில், அமலாக்க அதிகாரிகள் குழு மேற்கு துறைமுக சுதந்திர மண்டலத்தில் மூன்று கொள்கலன்களைக் கைப்பற்றியது.
“இச்சோதனையில் ஆறு பயன்படுத்தப்பட்ட டீசல் பேனல் வேன்கள் கண்டுபிடிக்கப்பட்டன, அவை ஒவ்வொன்றும் 5 டன்களுக்கு மேல் எடையைக் கொண்டிருந்தன.
இந்த வர்த்தகம் சுமாராக ரிம.690,000 மதிப்புள்ளதாய் கணிக்கப்பட்டது. ஆரம்பக்கட்ட விசாரணையில், இந்த பொருட்கள் ஆசியா நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு 2025 ஏப்ரல் மாதம் துறைமுகத்திற்கு வந்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டது,” என்று அவர் இன்று வடதுறைமுக சுங்கத் துறை தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தொடர்ந்து, ஜனவரி 14 ஆம் தேதி, சிலாங்கூர் ஜே.கே.டி.எம் மீண்டும் வடக்கு துறைமுக இலவச மண்டலப் பகுதியில் ஏழு யூனிட் டம்பர் லாரிகளைக் கைப்பற்றியதாகவும் முஹம்மத் அசார் கூறினார்.
“வாகனங்கள் மட்டுமல்லாமல், ஜனவரி 12 அன்று, 2,566 எடுத்துச் செல்லக்கூடிய எரிவாயு அடுப்புகளை (portable gas stove) வடதுறைமுகத்தில் கடத்தும் முயற்சியையும் தடை செய்தது.
இந்தப் பொருட்களின் மதிப்பு வரி உட்பட ரிம 170,923 ஆகும், ஏனெனில் அவற்றுக்கு எரிசக்தி ஆணையத்திலிருந்து (ST) இறக்குமதி அனுமதி கிடைக்கவில்லை,” என்று அவர் தெரிவித்தார்.
ஒரு அறிக்கை அல்லது சுங்கப் படிவம் 1 மூலம் பொருட்களை அறிவிப்பது இந்த வழக்குகளில் பயன்படுத்தப்பட்ட முறையாகும். இருப்பினும், இறக்குமதியாளர் MITI, எரிசக்தி ஆணையம் போன்ற தொடர்புடைய அமைச்சகங்கள் அல்லது நிறுவனங்களிடமிருந்து தேவையான இறக்குமதி அனுமதிகளைச் சமர்ப்பிக்கத் தவறிவிட்டதாகக் கண்டறியப்பட்டது.
“சட்டப்படி செல்லுபடியான அனுமதி இல்லாமல் இறக்குமதி செய்வது, நாட்டின் வருவாயுக்கு மட்டும் கேடு செய்யாது, ஆய்வுக்கு உட்படுத்தப்படாத மின்சாரம், வாயு பொருட்கள் போன்றவற்றின் பாதுகாப்பு தரநிலை பயனாளர்களுக்கு அபாயத்தை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்பும் உள்ளது.
இந்த வழக்கு “1967 சுங்கச் சட்டம்” பிரிவு 135 (1)(a) படி விசாரணைக்குள்ளாகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிக்கு பொருட்களின் மதிப்பின் குறைந்தது 10 மடங்கு அல்லது ரிம 100,000 முதல் அதிகபட்சம் 20 மடங்கு அல்லது ரிம.500,000 வரை அபராதம் விதிக்கப்படும், அல்லது ஆறு மாதம் முதல் ஐந்து ஆண்டு வரை சிறை, அல்லது இரண்டும் ஒன்றாக விதிக்கப்படும்,” என்று அவர் குறிப்பிட்டார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 5, 2026, 5:00 pm
தொழுகையில் இருந்த பெண்ணைத் தொந்தரவு செய்த மர்மநபர்: போலிஸ் தீவிர தேடல்
March 5, 2026, 1:04 pm
கெடா சிறு தொழில் மையங்களில் மாற்றம்: பாதுகாப்பும் உற்பத்தி விற்பனையும் உயர்வு
March 5, 2026, 12:56 pm
போதையில் வாகனம் ஒட்டிய ஆடவர்: இருவர் உயிரிழந்தனர்
March 5, 2026, 12:54 pm
தேசிய பாதுகாப்பு விவகாரத்தை அரசியல் மூலதனமாக மாற்ற வேண்டாம் – MKN
March 5, 2026, 12:51 pm
சரவாக்கில் முதல் ரேபிஸ் நோயாளி ஒருவர் மரணமடைந்தார்: சூல்கிப்லி
March 5, 2026, 12:49 pm
