செய்திகள் உலகம்
போரினால் இஸ்ரேலுக்கு வாரத்திற்கு 2.9 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்பு ஏற்படும்: பெசலெல் ஸ்மோட்ரிச்
டெல் அவீவ்:
ஈரானுடன் நடைபெற்று வரும் போரின் விளைவாக இஸ்ரேலுக்கு வாரத்திற்கு 2.9 பில்லியன் அமெரிக்க டாலர் வரை பொருளாதார இழப்பு ஏற்படக்கூடும் என அந்நாட்டு நிதி அமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் தெரிவித்துள்ளார்.
இந்த மதிப்பீடு, இஸ்ரேல் உள்நாட்டு பாதுகாப்பு கட்டளை அமல்படுத்திய “சிவப்பு” கட்டுப்பாடுகளை அடிப்படையாகக் கொண்டது. இதில் பணியிடங்களுக்கு செல்லும் இயக்கக் கட்டுப்பாடு, பள்ளிகள் மூடல், இராணுவ சேமப்படையினரை திரட்டுதல் ஆகியவை அடங்கும்.
வரும் வாரம் தொடக்கம் பொருளாதார இழப்புகள் தென்படத் தொடங்கும் எனவும், வாரத்திற்கு சுமார் 9.4 பில்லியன் இழப்பு ஏற்படும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலைமை மேலும் விரிவடைந்து வரும் நிலையில், மேற்காசியாவில் பெரிய அளவிலான போர் உருவாகும் அபாயம் குறித்த சர்வதேச கவலை அதிகரித்துள்ளது.
இரு தரப்பும் பதற்றத்தை தணிக்கத் தயாராக உள்ளன என்ற தெளிவான அறிகுறிகள் இதுவரை இல்லை என்பதால், நீடித்த நிலைதடுமாற்றம் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
April 21, 2026, 4:01 pm
எரிபொருள் தட்டுப்பாடு: வங்காளதேசத்தில் தொலைபேசியைப் பயன்படுத்த முடியாத நிலை உண்டாகலாம்
April 21, 2026, 3:43 pm
எல்லை தாண்டி வந்த போர் மேகங்கள்: அவசரமாக வெளியேற்றப்பட்ட எல்லையோர கிராம மக்கள்
April 21, 2026, 3:24 pm
ஜெர்மனியின் குருத்வாரா புனிதத்தலத்தில் வெடித்த போர்: 11 பேர் படுகாயம்
April 21, 2026, 12:12 pm
காலத்தைக் கடந்த தலைமைக்கு நூற்றாண்டு மரியாதை: மீண்டும் உயிர்த்த ராணியின் நினைவுகள்
April 21, 2026, 10:48 am
சீனாவை அச்சுறுத்தும் புதிய வைரஸ்: சிறுவர்களைக் குறிவைக்கும் 'பாரா இன்ஃபுளுயன்சா'
April 21, 2026, 9:49 am
ஜப்பானின் ஆயுதப் புரட்சி: உலகச் சந்தையில் நுழையும் போர்க்கப்பல்களும் ஏவுகணைகளும்
April 20, 2026, 4:07 pm
