செய்திகள் மலேசியா
சமூக பணிகளுக்கும் முன்னுரிமை வழங்கும் ஆலயங்கள் மாணவர்களுக்கு இலவச டியூசன் வகுப்பு
கோலாலம்பூர்:
சமய பணிகளில் அதிக ஆர்வம் காட்டும் அதே வேளையில் சமூக சமுதாய பணிகளில் முன்னுரிமை வழங்குவதற்கு சுபாங் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய நிர்வாகமும் இப்போது தீவிரம் காட்டி வருகின்றது.
குறைந்த வருமானம் பெறுகின்ற குடும்பங்களை சேர்ந்த இந்திய மாணவர்களுக்கு முடிந்தளவில் உதவிக் கரம் நீட்டுவதில் ஆலயங்கள் அக்கறை காட்டுகின்றன.
நாட்டில் முன்பு இந்தியர்கள் அதிகம் வாழ்ந்த தோட்டங்களில் ஒன்றாக சுபாங் தோட்டம் விளங்கியது.
சுபாங் தோட்டம் முற்றிலும் மேம்பாட்டு திட்டங்களில் சூழ்ந்தாலும் அங்கு கட்டப்பட்ட ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் இன்னமும் கம்பீரமாக காட்சி அளிக்கிறது.
130 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட மண்டபம் இப்போது சீரமைக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இளம் தொழில் முனைவோர் கணேசனின் முயற்சியால் மண்டபம் முழுமையாக சீரமைப்பு செய்யப்பட்டு அழகாக காட்சி அளிக்கிறது.
தொழில் முனைவர் கணேசன், டத்தோ மலர்விழி குணசீலன் ஆகியோர் தலைமையில் மண்டப திறப்பு விழா விமரிசையாக நடைபெற்றது.
இந்த மண்டபத்தில் குறிப்பாக 4ஆம் படிவம், 5ஆம் படிவத்தை சேர்ந்த இந்திய மாணவர்கள் இலவசமாக டியூஷன் பயில வாய்ப்பு வழங்கப்படுவதாக சுபாங் தோட்டம் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தலைவர் விஜையன் கருப்பையா தெரிவித்தார்.
இதனிடையே இந்த கோவில் மண்டபத்தை நல்ல முறையில் பயன்படுத்தி கொண்டு கல்வி பயிலும்படி மாணவர்களை அவர் கேட்டுக் கொண்டார்.
மேலும் இங்குள்ள மக்கள் கோவில்களுக்கு வந்து இறைவனை வழிபடும் படி அவர் கேட்டுக் கொண்டார்.
இன்றைய விழாவில் ஏராளமான பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்ட வேளையில் எஸ்.பி.எம் தேர்லில் சிறப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வெகுமதிளும் வழங்கப்பட்டன.
இதற்கிடையே இந்நிகழ்ச்சியில் ஆலயத் துணைத் தலைவர் மாபாட் ஜெய குமார், சுப்ரமணியம், ஆசிரியர்கள் உட்பட பெற்றோர்களுடன் மாணவர்களும் கலந்து கொண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 30, 2026, 6:25 pm
பொது சுகாதாரத் துறையை இலக்கவியமயமாக்கலுக்கு 1 பில்லியன் ரிங்கிட் நிதி உதவி: ஃபஹ்மி
August 30, 2026, 6:10 pm
அடுத்த ஆண்டு பள்ளிகளுக்கான பராமரிப்பு ஒதுக்கீடு 50 சதவீதம் அதிகரிக்கப்படும்: பிரதமர்
August 30, 2026, 6:09 pm
பூடி ரோன் 95 பெட்ரோல் மாதத்திற்கு மீண்டும் 300 லிட்டராக உயர்த்தப்படும்: பிரதமர்
August 30, 2026, 3:05 pm
நேப்பாளத்திற்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர்; மலேசியாவின் மனிதாபிமான உணர்வை பிரதிபலிக்கின்றன: குணராஜ்
August 30, 2026, 10:27 am
8 ஆண்டுகளாக தேசியக் கொடியை விநியோகித்து தேசப்பற்றை பரப்பும் 64 வயது ஆர். ராதா
August 30, 2026, 10:27 am
