செய்திகள் மலேசியா
ஜொகூரில் தேசிய முன்னணி வெற்றி பெற்றதால் நான் எந்த நேரத்தில் வெளியே செல்ல முடியும்: நஜிப் கிண்டல்
கோலாலம்பூர்:
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக், தனது நிலை தொடர்பாக நம்பிக்கை கூட்டணி முன்வைத்த கூற்றுகள் குறித்து கேள்விகளையும் கிண்டலான தொனியையும் எழுப்பியுள்ளார்.
ஜொகூர் மாநிலத் தேர்தல் முன்னாள் பிரதமரை விடுவிப்பதற்காக மட்டுமே நடத்தப்பட்டது என்று ஒருமுறை கூறிய நம்பிக்கை கூட்டணி தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு பதிலளிக்கும் விதமாக இந்தப் பதிவு வெளியிடப்பட்டதாக நம்பப்படுகிறது.
இன்று முகநூலில் ஒரு பதிவின் மூலம், அக்கட்சியின் கூற்றுகளை நஜிப் கேள்விக்குட்படுத்தியுள்ளார்.
நம்பிக்கை கூட்டணி ஜொகூர் மக்களிடம் பொய் சொல்ல முடியாது போலிருக்கிறது.
ஜொகூரில் தேசிய முன்னணி பெரிய வெற்றியைப் பெற்றதால், நஜிப் விடுதலையாகிவிடுவார் என கூறியது.
அப்படியானால், இன்று நான் விடுதலையாகிவிட்டேனா?.
ஏறக்குறைய எந்த நேரத்தில்? நான் வெளியே வர முடியும் என்று அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
நஜிப்பின் இந்த பதிவு தற்போது வைரலாகியதுடன் பேசும் பொருளாகவும் உருவாகியுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 11, 2026, 4:09 pm
பிரதமர் விரைவில் குணமடைய மக்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும்: ஜாஹித்
August 11, 2026, 4:08 pm
தாபோங் ஹாஜி தடயவியல் தணிக்கை அறிக்கை ஓராண்டுக்குள் முடிக்கப்பட வேண்டும்: மொஹைதின்
August 11, 2026, 3:10 pm
பாலியல் வல்லுறவு, ஆபாச வீடியோ வைத்திருந்தத கல்லூரி மாணவர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது
August 11, 2026, 2:33 pm
அரச குடும்பம் தொடர்பான தவறான பதிவு: சமூக ஆர்வலர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்
August 11, 2026, 12:53 pm
