செய்திகள் மலேசியா
ங்கா கோர் மிங் தனது ராஜினாமா வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்: கைரி
பாசிர் சாலாக்:
ஜொகூர் மாநிலத் தேர்தலில் தேசிய முன்னணி பெற்ற மகத்தான வெற்றியைத் தொடர்ந்து, வீடமைப்பு ஊராட்சி துறை அமைச்சர் ங்கா கோர் மிங் ராஜினாமா செய்ய வேண்டும்.
முன்னாள் அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின் இதனை வலியுறுத்தினார்.
ஒரு வாக்குறுதி அளிக்கப்பட்டுவிட்டால், அது நிறைவேற்றப்பட்டே ஆக வேண்டும்.
அவரிடம் அந்தப் பதவி விலகல் கோரப்பட வேண்டும்.
ஆனால் அவர் வாக்குறுதி அளித்திருந்தால், அதை அவர் நிறைவேற்ற வேண்டும்.
இன்று இங்குள்ள பாசிர் சலாக் அம்னோ பிரிவு மகளிர் பிரதிநிதிகள் கூட்டத்தின் தொடக்க விழாவில் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு கூறினார்.
முன்னதாக ஜொகூர் மாநிலத் தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி பெற்று, முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் விடுவிக்கப்பட்டால்,
பதவி விலகும் முதல் நபர் தானாக இருப்பேன் என்று ஜசெகவின் துணைத் தலைவராக உள்ள ங்கா கோர் மிங் கூறியதாக ஊடகங்கள் சமீபத்தில் செய்தி வெளியிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 12, 2026, 5:37 pm
ஜொகூர் மாநில மந்திரி புசாராக டத்தோ ஓன் ஹபிஸ் காஸி பதவியேற்றார்
July 12, 2026, 2:24 pm
நஜிப் விடுதலையானால் தான் நான் ராஜினாமா செய்வேன்; தேசிய முன்னணியின் வெற்றியால் அல்ல: ங்கா
July 12, 2026, 1:53 pm
ஜாஹித் ஹமிடி, ஓன் ஹபிஸ் ஆகியோர் சுல்தான் இப்ராஹிமை சந்தித்தனர்
July 12, 2026, 12:12 pm
ஜோகூர் தேர்தல்: 55 வேட்பாளர்கள் வைப்புத்தொகையை இழந்தனர்
July 12, 2026, 10:41 am
