செய்திகள் மலேசியா
ஜோகூர் தேர்தல்: 55 வேட்பாளர்கள் வைப்புத்தொகையை இழந்தனர்
ஜோகூர் பாரு:
நேற்று நடைபெற்ற 16வது ஜோகூர் மாநிலத் தேர்தலில் எண்ணப்பட்ட மொத்த வாக்குகளில் எட்டில் ஒரு பங்கைப் பெறத் தவறியதால், மொத்தம் 55 வேட்பாளர்கள் தங்களது வைப்புத்தொகையை இழந்தனர்.
பெர்சத்து கட்சியைச் சேர்ந்த 16 பேர், பாஸ் கட்சியைச் சேர்ந்த 11 பேர், மலேசிய இந்திய மக்கள் கட்சியைச் (MIPP) சேர்ந்த ஐந்து பேர், பெஜுவாங் கட்சியைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் 33 வேட்பாளர்களை நிறுத்திய பெரிகாத்தான் நேஷனல் (PN) கூட்டணியில், அதிகபட்சமாக 21 வேட்பாளர்கள் தங்களது வைப்புத்தொகையை இழந்தனர்.
இதற்கிடையில், நாட்டின் அரசியல் களத்திற்குப் புதியதாக நுழைந்த பார்ட்டி பெர்சமா மலேசியா (பெர்சமா), அதன் 15 வேட்பாளர்களும் தங்களது வைப்புத்தொகையை இழந்ததால் ஒரு பெரும் பின்னடைவைச் சந்தித்தது.
இதற்கிடையில், பக்கத்தான் ஹரப்பான் (PH) கூட்டணியைச் சேர்ந்த ஏழு வேட்பாளர்கள் தங்களது வைப்புத்தொகையை இழந்தனர்.
கூடுதலாக, ஆறு சுயேச்சை வேட்பாளர்கள், மலேசிய ஐக்கிய ஜனநாயகக் கூட்டணியைச் (MUDA) சேர்ந்த நான்கு வேட்பாளர்கள், பார்ட்டி ஒராங் அஸ்லி மலேசியா (ASLI), பார்ட்டி சோசலிஸ் மலேசியா (PSM) ஆகியவற்றைச் சேர்ந்த ஒரே வேட்பாளர்களும் தங்களது வைப்புத்தொகையை இழந்தனர்.
18 முதல் 40 வயதுக்குட்பட்ட வேட்பாளர்கள் அதிகபட்ச வைப்புத்தொகை இழப்புகளைப் பதிவு செய்தனர்; அந்த வயதுப் பிரிவில் போட்டியிட்ட 51 வேட்பாளர்களில் 41 சதவீதம் அல்லது 21 பேர் இந்த டெபாசிட் இழந்தனர்
16வது ஜோகூர் தேர்தலில், தேசிய முன்னணி (BN) போட்டியிட்ட 56 இடங்களில் 48 இடங்களை வென்று, மீண்டும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் மாநில அரசை அமைத்தது.
அம்னோ 36 இடங்களையும், MCA எட்டு இடங்களையும், ம இ கா நான்கு இடங்களையும் வென்றன.
பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி எட்டு இடங்களை வென்றது (DAP ஆறு, PKR ஒன்று, அமானா ஒன்று) அதேசமயம் பக்கத்தான் நேஷனல், பெர்சமா, MUDA, ASLI, PSM மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் எந்த இடத்தையும் வெல்லத் தவறினர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 11, 2026, 3:10 pm
பாலியல் வல்லுறவு, ஆபாச வீடியோ வைத்திருந்தத கல்லூரி மாணவர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது
August 11, 2026, 2:33 pm
அரச குடும்பம் தொடர்பான தவறான பதிவு: சமூக ஆர்வலர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்
August 11, 2026, 12:53 pm
டத்தாரான் காஜாங் மைதான சதுக்கம் இன்று தொடங்கி ஆகஸ்ட் 26ஆம் தேதி வரை தற்காலிகமாக மூடப்படுகிறது
August 11, 2026, 11:16 am
தபோங் ஹாஜியின் RCI அறிக்கையை விவாதிக்க மறுப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு
August 11, 2026, 10:45 am
தபோங் ஹாஜி RCI சிறப்பு மக்களவை கூட்டத்தில் பங்கேற்க முடியாதத்தற்கு பிரதமர் அன்வார் இப்ராஹிம் மன்னிப்பு
August 11, 2026, 9:18 am
