செய்திகள் மலேசியா
ஜாஹித் ஹமிடி, ஓன் ஹபிஸ் ஆகியோர் சுல்தான் இப்ராஹிமை சந்தித்தனர்
ஜொகூர்பாரு:
தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி, மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிமை இன்று சந்தித்தனர்.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பு, இன்று இங்குள்ள இஸ்தானா பாசிர் பெலாங்கியில் நடைபெற்றது.
இந்த சந்திப்பில் ஜொகூர் தேசிய முன்னணி தலைவர் டத்தோ ஓன் ஹபிஸ் காஸியும் கலந்து கொண்டார்.
நேற்று நடைபெற்ற 16ஆவது ஜொகூர் மாநிலத் தேர்தலில் போட்டியிட்ட 56 சட்டமன்ற இடங்களில் 48 இடங்களை வென்று தேசிய முன்னணி வென்றது.
இதற்கிடையில் மேலும் எட்டு மாநில சட்டமன்ற இடங்கள் நம்பிக்கை கூட்டணி வசம் உள்ளன.
இன்று மாலை இங்குள்ள இஸ்தானா புக்கிட் செரீனில், ஓன் ஹபீஸ் புதிய பதவிக் காலத்திற்கு ஜிகூர் மந்திரி புசாராகப் பதவியேற்பார் எனத் தெரிய வருகிறது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 11, 2026, 4:09 pm
பிரதமர் விரைவில் குணமடைய மக்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும்: ஜாஹித்
August 11, 2026, 4:08 pm
தாபோங் ஹாஜி தடயவியல் தணிக்கை அறிக்கை ஓராண்டுக்குள் முடிக்கப்பட வேண்டும்: மொஹைதின்
August 11, 2026, 3:10 pm
பாலியல் வல்லுறவு, ஆபாச வீடியோ வைத்திருந்தத கல்லூரி மாணவர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது
August 11, 2026, 2:33 pm
அரச குடும்பம் தொடர்பான தவறான பதிவு: சமூக ஆர்வலர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்
August 11, 2026, 12:53 pm
