செய்திகள் மலேசியா
ஜொகூர் மாநில மந்திரி புசாராக டத்தோ ஓன் ஹபிஸ் காஸி பதவியேற்றார்
ஜொகூர்பாரு:
ஜொகூர் மாநில மந்திரி புசாராக டத்தோ ஓன் ஹபிஸ் காஸி இன்று அதிகாரப்பூர்வமாக பதவியேற்றார்.
இன்று மாலை இஸ்தானா புக்கிட் செரினில், ஜொகூரின் இடைக்கால சுல்தான், துங்கு மகோத்தா இஸ்மாயில் முன்னிலையில் அவர் பதவியேற்றார்.
நேற்று நடைபெற்ற 16ஆவது ஜொகூர் மாநிலத் தேர்தலில் தேசிய முன்னணி பெற்ற மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இந்தப் பதவியேற்பு விழா நடைபெற்றது.
மாச்சாப் சட்டமன்ற உறுப்பினரின் மறுநியமனத்திற்கு மக்களின் சிறப்பு ஆணை வலுவாக ஆதரவளித்தது.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் அறிவிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ முடிவுகளின்படி, போட்டியிட்ட 56 மாநில சட்டமன்ற இடங்களில் 48 இடங்களை வென்று, தேசிய முன்னணி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 11, 2026, 4:09 pm
பிரதமர் விரைவில் குணமடைய மக்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும்: ஜாஹித்
August 11, 2026, 4:08 pm
தாபோங் ஹாஜி தடயவியல் தணிக்கை அறிக்கை ஓராண்டுக்குள் முடிக்கப்பட வேண்டும்: மொஹைதின்
August 11, 2026, 3:10 pm
பாலியல் வல்லுறவு, ஆபாச வீடியோ வைத்திருந்தத கல்லூரி மாணவர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது
August 11, 2026, 2:33 pm
அரச குடும்பம் தொடர்பான தவறான பதிவு: சமூக ஆர்வலர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்
August 11, 2026, 12:53 pm
