செய்திகள் மலேசியா
கோர்ட்டுமலை ஸ்ரீ கணேசர் ஆலயத்தின் மாபெரும் கும்பாபிஷேக தேதி; அடுத்த வாரம் அறிவிக்கப்படும்: டான்ஸ்ரீ நடராஜா
கோலாலம்பூர்:
கோர்ட்டுமலை ஸ்ரீ கணேசர் ஆலயத்தின் மாபெரும் கும்பாபிஷேக தேதி அடுத்த வாரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ ஆர். நடராஜா இதனை கூறினார்.
நாட்டில் பிரசித்தி பெற்ற ஆலயமாக கோர்ட்டுமலை ஸ்ரீ கணேசர் ஆலயம் விளங்குகிறது.
இந்த ஆலயத்தின் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு திருப்பணி வேலைகள் மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகின்றது.
குறிப்பாக இவ்வாலயம் முழுமையாக கருங்கல்லில் கட்டப்பட்டு வருகிறது. திருப்பணிக்கு பின் இவ்வாலயம் மிகவும் பிரமாண்டமாக இருக்கும்.
இந்நிலையில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கோர்ட்டுமலை கணேசர் ஆலயத்தில் இருக்கின்ற விநாயகப் பெருமான் பாலாலய வைபவம் இன்று சிறப்பாக நடைபெற்றது.
மூலஸ்தானத்தில் இருக்கும் விநாயகர் பெருமான் தற்காலிகமாக வழிபாட்டிற்கு மூடப்படுகிறது.
மேலும் அத்தி மரத்தில் ஆன விநாயகப் பெருமான் ஆலயத்தின் முன்புறம் வைக்கப்பட்டுள்ளது. அங்கு தான் இனி வழிபாடுகள் நடைபெறும்.
ஆக பக்தர்கள் எந்தவொரு தயக்கமும் இன்றி ஆலயத்திற்கு வந்து வழிபடலாம் என்று அவர் கூறினார்.
இதனிடையே கோலாலம்பூர் ஸ்ரீ மாரியம்மன் தேவஸ்தானத்தின் கூட்டம் அடுத்த வாரம் நடைபெறவுள்ளது.
இந்த கூட்டத்தில் ஆலயத்தின் கும்பாபிஷேக விழா குறித்து முழுமையாக விவாதிக்கப்படும்.
அதன் பின் கும்பாபிஷேக தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று டான்ஸ்ரீ நடராஜா கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 11, 2026, 3:10 pm
பாலியல் வல்லுறவு, ஆபாச வீடியோ வைத்திருந்தத கல்லூரி மாணவர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது
August 11, 2026, 2:33 pm
அரச குடும்பம் தொடர்பான தவறான பதிவு: சமூக ஆர்வலர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்
August 11, 2026, 12:53 pm
டத்தாரான் காஜாங் மைதான சதுக்கம் இன்று தொடங்கி ஆகஸ்ட் 26ஆம் தேதி வரை தற்காலிகமாக மூடப்படுகிறது
August 11, 2026, 11:16 am
தபோங் ஹாஜியின் RCI அறிக்கையை விவாதிக்க மறுப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு
August 11, 2026, 10:45 am
தபோங் ஹாஜி RCI சிறப்பு மக்களவை கூட்டத்தில் பங்கேற்க முடியாதத்தற்கு பிரதமர் அன்வார் இப்ராஹிம் மன்னிப்பு
August 11, 2026, 9:18 am
