செய்திகள் மலேசியா
அசாம் பாக்கி விவகாரம் தொடர்பான விசாரணை; செயல்முறை பின்பற்றப்படுகிறது: பிரதமர்
கோலாலம்பூர்:
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான் ஸ்ரீ அசாம் பாக்கி சம்பந்தப்பட்ட பங்கு உரிமை தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பான பிரச்சினை ஒருபோதும் முடிக்கப்படவில்லை.
மாறாக பரிந்துரைக்கப்பட்ட விசாரணை செயல்முறையையே மேற்கொண்டு வருவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
மாச்சாங் நாடாளுமன்ற உறுப்பினர் வான் அகமது ஃபைசல் வான் அகமது கமலின் துணை கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இவ்வாறு கூறினார்.
அவர் இந்த விவகாரம் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாடு மற்றும் விசாரணையின் வெளிப்படைத்தன்மையின் அளவைக் கேள்வி எழுப்பினார்.
அசாம் முன்பு விடுப்பில் இருக்க வேண்டும் என்ற வலியுறுத்தல் குறித்த பிரச்சினையை வான் அகமது ஃபைசல் எழுப்பினார்.
மேலும் இந்த விஷயத்தைக் கையாள்வதில் அரசாங்கம் இப்போது வேறுபட்ட அணுகுமுறையை எடுக்கிறதா என்று கேள்வி எழுப்பினார்.
இந்த விஷயத்திற்கு பதிலளித்த டத்தோஶ்ரீ அன்வார், ஒவ்வொரு குற்றச்சாட்டும் விசாரிக்கப்பட வேண்டும் என்ற தனது நிலைப்பாடு நிலையானது.
ஆனால் உண்மைகள் இல்லாமல் குற்றச்சாட்டுகளைச் செய்வது பொருத்தமானதல்ல என்று அவர் வலியுறுத்தினார்.
நான் கேள்விகளுக்கு பதிலளிப்பேன், ஆனால் குற்றச்சாட்டுகளை முன்வைக்கவோ அல்லது அனுமானங்களை முன்வைக்கவோ வேண்டாம். விசாரணை உண்மைகளைப் பெறட்டும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 28, 2026, 5:03 pm
மெனாரா மெர்டேக்கா 118 கட்டிடம் இனி மெனாரா மெர்டேக்கா மேபேங்க் என பெயர்மாற்றம் கண்டுள்ளது
July 28, 2026, 3:45 pm
இஸ்ரேல் நாட்டு பயண ஆவணத்தை மலேசியா அங்கீகரிக்காது: உள்துறை அமைச்சு திட்டவட்டம்
July 28, 2026, 3:15 pm
மாரானில் இரு வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி சாலை விபத்து: மூவர் பலி, இருவர் படுகாயம்
July 28, 2026, 12:39 pm
