செய்திகள் மலேசியா
ஜொகூரில் நோன்பு திறப்பு, ரமலான் உதவி வழங்கும் நிகழ்வு சமுதாய மக்களை ஒன்றிணைத்தது
ஜொகூர் பாரு:
ஜொகூரில் நடைபெற்ற நோன்பு திறப்பு, ரமலான் உதவி வழங்கும் நிகழ்வு சமுதாய மக்களை ஒன்றிணைத்தது.
ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் பள்ளிவாசலில் இன்று ஒரு அர்த்தமுள்ள நோன்பு திறப்பு, ரமலான் உதவி வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
ஈகைப் பெரு நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் நோக்கத்தில் 1,000 குடும்பங்களுக்கு ரமலான் உணவு கூடைகள் விநியோகிக்கப்பட்டன.
கூடுதலாக வரவிருக்கும் பண்டிகைக் காலத்திற்குத் தயாராக 200 ஆதரவற்ற பிள்ளைகளுக்கு ரொக்கப் பணமும் புத்தாடைகளும் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் முக்மின் ஒருங்கிணைப்பாளர் டத்தோ வீரா ஷாகுல் தாவூத், பிரெஸ்மாவின் தலைவர் டத்தோ முகமது மோசின், மிம்கோய்ன் துணைத் தலைவர் டத்தோ அப்துல் ஹக்கீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
டத்தோ சையத் காதிர், பள்ளிவாசல் நிர்வாகக் குழுவின் அர்ப்பணிப்பு முயற்சிகளால் இந்த நிகழ்வு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிகழ்வு புனித ரமலான் மாதத்தில் சமூக நலனுக்கான அவர்களின் வலுவான அர்ப்பணிப்பையும் ஆதரவையும் பிரதிபலிக்கிறது.
ஏறக்குறைய 1200 பேர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள் என்பது குறிப்பிடற்றக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 1, 2026, 5:53 pm
பிபிபி கட்சியில் கல்வி உதவி அழைப்பு சேவை; அனைத்து மாணவர்களுக்கும் வழிகாட்டும்: விக்னேஷ்
March 1, 2026, 3:26 pm
நாட்டிற்கே பெருமை சேர்த்த பள்ளியாக ரந்தாவ் தமிழ்ப்பள்ளி விளங்குகிறது: டத்தோ மோகன்
March 1, 2026, 3:23 pm
மதப் பிரச்சினைகள்; உறுதியான நடவடிக்கை நியாயமாக எடுக்கப்பட வேண்டும்: பகாங் சுல்தான்
March 1, 2026, 3:18 pm
மத நிந்தனை விவகாரத்தில் அரசாங்கம் அமைதியாக இல்லை; விசாரணை நடந்து வருகிறது: பிரதமர்
March 1, 2026, 3:17 pm
