நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ரமலான் உதவிகள் சமூக கடப்பாட்டை தாண்டி சமுதாய மக்களை ஒன்றிணைக்கிறது: டத்தோ அப்துல் ஹமித்

செராஸ்:

ரமலான் உதவிகள் சமூக கடப்பாட்டை தாண்டி இந்திய முஸ்லிம் சமுதாய மக்களை ஒன்றிணைக்கிறது.

எஹ்சான் வர்த்தக குழுமத்தின் தலைவர் டத்தோ ஹாஜி பிவி அப்துல் ஹமித் இதனை கூறினார்.

எஹ்சான் வர்த்தக குழுமமும், கூட்டரசு பிரதேச கிம்மாவும் இணைந்து 250 பேருக்கு ரமலான் உதவிகளை வழங்கியது.

கூட்டரசு பிரதேச  கிம்மா தலைவர் சைட் அன்சாரி தலைமையில்  செராஸில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

கிம்மா கட்சியின் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ ஹாஜி செய்யது இப்ராஹிம், கிம்மா துணை தலைவர் ஹாரிஸ், உதவித் தலைவர் ஹூசேன் உட்பட உயர்மட்ட தலைவர்கள் இதில் கலந்து சிறப்பித்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் நோன்பு பெருநாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு இந்த உதவிகள் வழங்கப்படுகிறது.

இறைவன் கருணையால் கிம்மா கட்சி ஆதரவோடு நாடு தழுவிய அளவில்  ஏழை எளிய மக்களுக்கு எஹ்சான் வர்த்தக குழுமம் வழங்கும்.

ரமலான் உதவிகள் எங்களின் சமூக கடப்பாட்டு நடவடிக்கையாக இருந்தாலும்,

நாடு தழுவிய நிலையில் உள்ள இந்திய முஸ்லிம் சமுதாயத்தை ஒன்றிணைக்கும் முயற்சியாகவும் இது அமைந்துள்ளது.

அவ்வகையில் இதுபோன்ற நிகழ்வுகள் வருங்காலங்களிலும் தொடர்ச்சியாக நடத்தப்படும் என்று  டத்தோ ஹாஜி அப்துல் ஹமித் தெரிவித்தார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset