நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மாணவர் இஸ்லாத்தை அவமதித்த விவகாரம்; விசாரணை ஆவணங்கள் துணை அரசு வழக்கறிஞருக்கு அனுப்பப்பட்டுள்ளன: போலிஸ்

குவாந்தான்:

இஸ்லாத்தை அவமதித்ததாக சந்தேகிக்கப்படும் மாணவர் மீதான வழக்கு தொடர்பான விசாரணை ஆவணங்களை போலிசார் முடித்துள்ளனர்.

சந்தேக நபர் இன்னும் காவலில் உள்ளார்.

விசாரணை ஆவணங்கள் துணை அரசு வழக்கறிஞருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பகாங் மாநில போலிஸ் தலைவர் டத்தோஸ்ரீ யஹாயா ஒத்மான் தெரிவித்தார்.

போலிசார் மேலும் அறிவுறுத்தல்களுக்காகக் காத்திருக்கிறது.

நேற்று இரவு நிலவரப்படி, இந்த வழக்கு தொடர்பாக நாடு தழுவிய அளவில் 28 காவல் புகார்களை தனது தரப்பினர் பெற்றுள்ளது.

நேற்று இரவு குவாந்தான் மாவட்ட போலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சிக்குப் பின் அவர் செய்தியாளர்களிடம் இதனை கூறினார்.

இந்த வழக்கில் போலிஸ் உரிய நடவடிக்கை எடுக்கும். சந்தேக நபர் விசாரணை செயல்முறை முழுவதும் நல்ல ஒத்துழைப்பை வழங்கியதாக அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset