நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அனைத்துலகத் தமிழர் சித்தர் மரபு மாநாடு; சித்தர் மரபுகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும்: டத்தோ சிவக்குமார்

பெட்டாலிங்ஜெயா:

அனைத்துலகத் தமிழர் சித்தர் மரபு மாநாடு சித்தர் மரபுகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும்.

மஹிமா தலைவர் டத்தோ ந. சிவக்குமார் இந்த நம்பிக்கையை தெரிவித்தார்.

அனைத்துலகத் தமிழர் சித்தர் மரபு மாநாடு இன்று தொடங்கி அடுத்த 3 நாட்களுக்கு மலாயா பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது.

மலாயா பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வியல் துறையின் ஏற்பாட்டில் இம்மாநாடு நடைபெறுகிறது.

சித்தர்தம் அழியாத ஞானச் செல்வங்களின் காப்பு என்ற கருப்பொருளுடன் இம்மாநாடு நடைபெறுகிறது.

மலேசியா, இந்தியா, சிங்கப்பூர் உட்பட பல நாடுகளில் இருந்து பேராளர்கள் இம்மாநாட்டில் கலந்துக் கொண்டுள்ளனர்.

இம்மாநாட்டை தொடக்கி வைத்து பேசிய டத்தோ சிவக்குமார்,

மக்களிடையே தமிழர் சித்தர் மரபு தொடர்பான புரிதலை ஏற்படுத்தும் நோக்கில் இம்மாநாடு நடத்தப்படுகிறது.

இதுவொரு மகத்தான முயற்சியாகும். இவ்வேளையில் ஏற்பாட்டுக் குழுவினருக்கு எனது பாராட்டுகள்.

மேலும் சித்தர் மரபுகளை அடுத்த தலைமுறைக்கு இந்த மாநாடு கொண்டு சேர்க்கும்.

அதன் அடிப்படையில் அதிகமான இளைஞர்கள் இம்மாநாட்டில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி.

ஆக இதுபோன்ற மாநாடுகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும்.

இந்த மாநாட்டுக்கு கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானமும் மஹிமாவும் தொடர்ந்து ஆதரவை வழங்கும் என டத்தோ சிவக்குமார் கூறினார்.

வரும் ஞாயிற்றுக்கிழமை வரை இந்த மாநாடு மலாயா பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது.

பல முக்கிய அம்சங்களுடன் இந்த மாநாடு அடுத்த இரண்டு நாட்களுக்கு நடைபெறும்.

இதன் அடிப்படையில் ஒரு வெற்றி மாநாடாக இது அமையும் என்று மலாயா பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வியல் துறையின் மூத்த விரிவுரையாளர் முனைவர் சில்லாழி கந்தசாமி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset